Thug Life : துல்கருக்கு பதில் சிம்பு... ஜெயம் ரவிக்கு பதில் இவரா? தக் லைஃப் பட வாய்ப்பை தட்டிதூக்கிய மாஸ் ஹீரோ

First Published Apr 1, 2024, 10:32 AM IST

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகிய நிலையில், அவருக்கு பதில் நடிக்க உள்ள மாஸ் நடிகர் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Thug Life

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இதில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க கமிட் ஆனது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

Thug Life Movie

தக் லைஃப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் மற்றும் திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை செர்பியாவில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்த நிலையில், திடீரென படப்பிடிப்பை தள்ளி வைத்தனர்.

இதையும் படியுங்கள்... Anitha Vijayakumar : கோலிவுட் பிரபலங்களுடன் ஹோலி கொண்டாட்டம்... அனிதா விஜயகுமாரின் கலர்புல் கிளிக்ஸ் இதோ

Simbu, Kamal

நடிகர் கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் பிசியாக உள்ளதால், தேர்தல் முடிந்த பின்னரே ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் சூழல் உருவானது. இதனால் படப்பிடிப்பை தள்ளி வைத்தனர். படப்பிடிப்பு தள்ளிப்போனதன் காரணமாக தக் லைஃப் படத்தில் இருந்து நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் அடுத்தடுத்து விலகி உள்ளனர். கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்கள் இருவருமே விலகியதாக கூறப்படுகிறது.

arun vijay

அவர்களுக்கு பதில் நடிக்க உள்ள நடிகர்கள் யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு நடிக்க கமிட்டானார் என்கிற தகவல் கடந்த வாரம் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவிக்கு பதிலாக நடிக்க உள்ள நடிகர் பற்றிய அப்டேட் வந்துள்ளது. அதன்படி ஜெயம் ரவிக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளாராம். இதற்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அருண் விஜய் தற்போது இரண்டாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Aranmanai 4 : கிளாமரில் தெறிக்கவிட்ட தமன்னா & ராஷி கண்ணா... அரண்மனை நாயகிகளின் அடிபொலி கவர்ச்சி போட்டோஸ் இதோ

click me!