புகழ்பெற்ற நாகூர் சந்தனக்கூடு விழா... சர்ப்ரைஸாக ஆட்டோவில் வந்து கலந்துகொண்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

First Published Dec 24, 2023, 2:58 PM IST

புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467-ம் ஆண்டு கந்தூரிவிழாவின் ஒருபகுதியான சந்தனக்கூடு நிகழ்வில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து கலந்துகொண்டார்.

AR Rahman

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நாகப்பட்டினத்திலிகுந்து துவங்கியது. 

AR Rahman at nagore dargah

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றது. கலைநிகழ்ச்சியுடன் தாரை தப்படைகள் பேண்டு வாத்தியங்கள் முழங்க இளைஞர்கள் சந்தனக்கூடு மற்றும் பல்வேறு வடிவில் வந்த மனோராக்களை கண்டு ஆடிப்பாடி வரவேற்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

AR Rahman at kandhuri festival

அப்போது ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மும்மதத்தினர் சந்தனக்கூட்டின் மீது பூக்களை தூவியும் பல்வேறு வடிவில் வந்த மினாராக்களை கண்டும் மகிழ்ந்தனர். சந்தனக்கூடு ஊர்வலமானது அதிகாலை 4 மணிக்கு நாகூரை சென்றடைந்தது. பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெறும் சந்தனம் பூசும் வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

Isaipuyal AR Rahman

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழா நடைபெற்ற இடத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீரென ஆட்டோவில் வந்து இறங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள்...  நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே... அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை நிராகரித்தது ஏன்? ரம்பா சொன்ன சீக்ரெட்

click me!