இத்தனை பெரிய தலைகளை அடிச்சு துவம்சம் பண்ணி தான் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் ஜெயிச்சாரா? இசைப்புயலின் கொல மாஸ் சம்பவம்

First Published Jan 6, 2024, 3:02 PM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருது வென்றது அனைவரும் அறிந்திருந்தாலும் அவர் யாரை வீழ்த்தி அவ்விருதை வென்றார் என்பதை பார்க்கலாம்.

AR Rahman

ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். அவர் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனர் என்கிற வெளிநாட்டு படத்துக்கு இசையமைத்ததற்காக ஆஸ்கர் விருது வென்றார். அதுவும் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கர் விருது. ஒன்று சிறந்த பாடலுக்காகவும், மற்றொன்று சிறந்த பின்னணி இசைக்காகவும் அவர் இந்த ஆஸ்கர் விருதை வென்று அசத்தினார்.

Isaipuyal AR Rahman

அவருக்கு பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு இந்திய இசையமைப்பாளரும் ஆஸ்கர் விருதை வெல்லமுடியாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக கீரவாணி வென்று சாதனை படைத்தார். ஏ.ஆர்.ரகுமான் வெளிநாட்டுக்கு படத்துக்கு இசையமைத்து ஆஸ்கர் வென்றிருந்ததால், இந்திய படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற முதல் இசையமைப்பாளர் என்கிற பெருமை கீரவாணிக்கு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... 57 வயதிலும் வேகம் குறையாத இசைப்புயல்... பணக்கார இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இதோ

AR Rahman Oscar competitors

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அவர் யார் யாரை வீழ்த்தி அவ்விருதை வென்றார் என்பது அறிந்தால் அனைவரும் ஆச்சர்யப்படுவீர்கள். ஏ.ஆர்.ரகுமான் உடன் போட்டியில் இருந்தது அலெக்ஸாண்டர் டெஸ்பால்ட், ஜேம்ஸ் நியூட்டன் ஹாவர்டு, டேனி எல்மன் மற்றும் தாமஸ் நியூமன் ஆகியோர் தான்.

AR Rahman Birthday

இதில் the curious case of benjamin button என்கிற படத்திற்காக அலெக்ஸாண்டர் டெஸ்பால்ட் நாமினேட் ஆகி இருந்தார். இவர் ஹாரிப்பாட்டர் மற்றும் டெத் ஹாலோஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார். அதேபோல் ஜேம்ஸ் நியூட்டன் ஹாவர்டு defiance என்கிற படத்திற்காக நாமினேட் ஆகி இருந்தார். இவர் பேட்மேன் தி டார்க் நைட் படத்தின் இசையமைப்பாளர் ஆவார்.

AR Rahman Oscar award winner

மில்க் படத்திற்காக நாமினேட் ஆன டேனி எல்மன் ஸ்பைடர்மேன் படத்திற்கு இசையமைத்தவர் ஆவார். இறுதியாக தாமஸ் நியூமன் WALL-E படத்திற்காக நாமினேட் ஆகி இருந்தார். இவர் ஷஷாங்க் ரிடம்ப்ஷன் படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல பெரிய தலைகளை வீழ்த்தி தான் இசைப்புயல் சிறந்த பின்னணி இசைக்கான விருதை தட்டிச்சென்று இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... மாட்டிக்கிட்ட பங்கு... சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பியா? தீயாய் பரவும் தகவல்

click me!