Tillu Square : இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தந்த அனுபமா... தில்லு ஸ்கொயர் படத்துக்கு கோடி கோடியாய் கொட்டும் வசூல்

First Published Apr 11, 2024, 8:42 AM IST

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் டில்லு ஸ்கொயர் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.

Tillu Square

2024ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சரிவரை அமையாவிட்டாலும், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு ஒரு பொன்னான ஆண்டாகவே அமைந்துள்ளது. கோலிவுட்டில் இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் என சொல்லும் அளவுக்கு ஒரு படம் கூட இல்லை. ஆனால் மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம், பிரம்மயுகம் போன்ற படங்கள் உள்ளன. அதேபோல் தெலுங்கிலும் ஹனுமன் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

Tillu Square movie Collection

அந்த வரிசையில் டோலிவுட் கொடுத்துள்ள மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் தான் டில்லு ஸ்கொயர். இப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்தை மாலிக் ராம் இயக்கி உள்ளார். இப்படம் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இது கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன டிஜே டில்லு படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

இதையும் படியுங்கள்... Shabana Quits Mr Manaivi: மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறும் ஷபானா! இது தான் காரணமா?

Tillu Square Box Office

முதல் பாகத்துக்கு இணையாக காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ள இப்படம், ரசிகர்களை மிகவும் கவர்ந்திழுக்க முக்கியப் காரணம் அதில் இடம்பெறும் அளவில்லா லிப் லாக் முத்தக் காட்சி தான். நடிகை அனுபமா பரமேஸ்வரன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க அதிகளவில் சம்பளம் வாங்குகிறார் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அந்த முத்தக் காட்சிகள் தான் தற்போது அப்படத்தின் வசூல் வேட்டைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Tillu Square 100 crore collection

இதனால் டில்லு ஸ்கொயர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ.68.2 கோடி வசூலித்து உள்ளது. அதேபோல் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.8.5 கோடி வசூலித்துள்ள இப்படம் வெளிநாடுகளில் ரூ.26.5 கோடி வசூலித்து இருக்கிறது. இதன்மூலம் ரிலீஸ் ஆன 12 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.103.2 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளதோடு தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... Anikha: இந்த மாதிரி கேள்வி என்கிட்ட கேட்காதீங்க! எனக்கு 17 வயசு தான் ஆகுது...எல்லை மீறியதால் கடுப்பான அனிகா!

click me!