Amala: ஆடை பட நிர்வாண சர்சைக்குக்கு பிறகு மீண்டும் தமிழில் ஹீரோயினாகும் அமலா பால்...அதுவும் யார் கூட தெரியுமா?

First Published May 16, 2022, 11:29 AM IST

Amala Paul Latest Movie: நடிகை அமலா பால் ஆடை படத்தில், நடித்ததற்காக நிர்வாண  சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

amala paul

தமிழ் திரையுலகில், முன்னணி நடிகைகளும் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால். இதையடுத்து, மைனா  படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் பட்டாளத்தை தன் வசம் கொண்டார். 

amala paul

மிக குறிகிய காலத்திலேயே, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர, கோலிவுட்டில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்துளளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து  படங்களுக்கும் வசூலில் குறைவில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

amala paul

தமிழ் மட்டுமின்றி,  தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால் (Amala Paul), பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

amala paul

கடந்த 2019ஆம் ஆண்டு, கடைசியாக இவர் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை படத்தில், நிர்வாண கோலத்தில் நடித்ததற்காக சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தமிழ் சினிமாவில் ஒப்பந்தமான படங்களில் இருந்தும் அமலா பால் நீக்கப்பட்டார்.

amala paul

'ஆடை' படத்திற்கு பிறகு நடிகை அமலா பால், முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.  இதையடுத்து, தொடர்ந்து மற்ற மொழி படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வந்தார். இணையத்தில், ஆக்டிவாக இருக்கும் அமலா பால், ரசிகர்களை கவர்ந்திழுக்க விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். 

amala paul

இந்நிலையில், தமிழ் சினிமாவில் ஹாலிதா ஷமீம் இயக்கும் மின்மினி படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார் அமலா பால்.  'மின்மினி' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 2016ல் நிறைவடைந்தது. இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

amala paul

இந்த படத்தில், நடிகை அமலா பால் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர்களின் கதாப்பாத்திரம் குறித்த முழு தகவல் இதுவரை வெளியாகவில்லை.

amala paul

ஏற்கனவே, அமலா பாலும் விஷ்ணு விஷாலும் ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்து, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, ஏராளமான விருதுகளையும் வாங்கி குவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடிகை அமலா பால் மற்றும் விஷ்ணு விஷால் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க....Sathyaraj: ரஜினி, கமல் எல்லாம் ஓரம்போ..ஒரே ஆண்டில் மாபெரும் சாதனை புரிந்த சத்யராஜ்... அதுவும் எதில் தெரியுமா?

click me!