Allu Arjun: அச்சுஅசல் அப்படியே இருக்கே! துபாயில் திறக்கப்பட்ட தனது மெழுகு சிலை பார்த்து மெர்சலான அல்லு அர்ஜுன்

First Published Mar 29, 2024, 12:15 PM IST

நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபாயில் மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் பல நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வில் திறக்கப்பட்டது. 

Allu Arjun

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் ஆறு முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவின் மதிப்புமிக்க விருதான தேசிய விருதையும் வென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற முதல் நடிகர் அல்லு அர்ஜுன் தான். புஷ்பா படத்திற்காக அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.

Allu Arjun wax Statue

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபாயில் மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் மார்ச் 28ந் தேதி திறக்கப்பட்டது. அல்லு அர்ஜுன் தான் இந்த சிலையை திறந்துவைத்தார். அல்லு அர்ஜுனின் இந்த மெழுகு சிலை அவரது புகழ்பெற்ற 'புட்ட பொம்மா' பாடலின்  கருப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்ப்பவர்கள் அவரது சின்னச் சின்ன நடன அசைவுகளைக் கூட எளிதில் கற்றுக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்... Dhanush Salary : என்னது ஒரு படத்துக்கு 100 கோடியா...! சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய தனுஷ் - காரணம் என்ன?

Allu Arjun wax statue opened

பிளாக்பஸ்டர் திரைப்படமான 'அலா வைகுந்தபுரமுலா'வில் இருந்து அவரது நடனக் காட்சியை நினைவுபடுத்தும் வகையில் ஒரு சிவப்பு நிற ஜாக்கெட்டில் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை அமையப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் ஆவார். 

இந்த பெருமைமிகு தருணம் பற்றி அல்லு அர்ஜுன் கூறியதாவது, "நான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மேடம் டுசாட்ஸூக்குச் சென்றிருக்கிறேன். அங்கு எனக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது. இப்போது எனக்கு ஒரு மெழுகு சிலை வைத்திருக்கிறார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை! மிக்க நன்றி! என்னுடைய இந்த மெழுகு சிலை, கிட்டத்தட்ட என்னைக் கண்ணாடியில் பார்ப்பது போன்ற அனுபவத்தைக் கொடுத்தது!" என்றார்.

Allu Arjun wax statue at Madame Tussauds Dubai

அல்லு அர்ஜுனின் மெழுகு சிலையை உருவாக்க, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட அளவீடுகள் எடுக்கப்பட்டு விவரங்கள் அனைத்தும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம், சிலையில் ஒவ்வொரு அம்சமும் குறிப்பாக நடன அசைவுகள் வரை சரியாக பிரதிபலிப்பதை உறுதி செய்துள்ளது. அல்லு அர்ஜூனின் மெழுகு சிலை திறத்தலின்போது அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். 

இதையும் படியுங்கள்... Anushka shetty : சினிமாவில் மவுசு இல்லை... அரசியலில் குதிக்கும் அனுஷ்கா? பிரபல நடிகரின் கட்சியில் இணைய திட்டம்

click me!