Ajith 61: அஜித்தால் ஓரம் கட்டப்பட்டாரா தபு..? அஜித்துடன் ஜோடி சேரும் 31 வயது நடிகை...யார் தெரியுமா..?

First Published Apr 12, 2022, 11:15 AM IST

Ajith 61: வலிமை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அடுத்ததாக தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் நேற்று பூஜையுடன் துவங்கியது. 

AK 61

உலக அளவில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் 200 கோடியை கடந்து பெரும் சாதனை படைத்தது.

AK 61

பான் இந்தியா திரைப்படமான இதில், அஜித்தை தாண்டி நிறைய திரை பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். படத்தின் கதை, நடிகர்களை தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் தான் அதிகம் ரசிக்கப்பட்டன.

AK 61

அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். பூஜை போடப்பட்ட ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.  

AK 61

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இதில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

AK 61

மொத்தம் 75 நாட்கள் சூட்டிங் நடைபெறும் AK 61 படத்தின், படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

AK 61

அஜித்துடன் அண்மையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் வித்யா பாலனுக்கு தமிழ் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். 

AK 61

இதையடுத்து, ரஜினியின் காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஹீமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். வலிமை படத்தில் அஜித்தின் காதலியாக ஷிமா குரோஷி  நடித்துள்ளார்.

AK 61

இந்நிலையில், அந்த வரிசையில் பாலிவுட் நடிகை தபு இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது என்று கூறப்பட்டு வந்தது. இதனை முற்றிலும் AK 61 படக்குழு மறுத்துள்ளது. 

AK 61

இந்நிலையில், AK 61 படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது நடிகை ரகுல் ப்ரீத் சிங் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு தரப்பில் விரைவில்   அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!