அல்வா கொடுத்த அஜித்... பிளாக்பஸ்டர் நாயகன் உடன் அடுத்த படம் - சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

First Published Sep 20, 2023, 11:42 AM IST

அஜித்தின் 62வது படத்தை இயக்குவதாக இருந்த விக்கி திடீரென அதிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

Ajith, Vignesh shivan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏகே 62 திரைப்படம். அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கடந்தாண்டு மார்ச் மாதமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Ajith vignesh shivan movie drop

இதையடுத்து அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை எல்லாம் முடித்து கடந்த ஜனவரி மாதம் ஷூட்டிங்கும் தொடங்க இருந்தனர். சந்தானம், அரவிந்த் சாமி ஆகியோரெல்லாம் இப்படத்தில் நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அதேபோல் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையும் நெட்பிளிக்ஸிற்கு விற்கப்பட்டது. இப்படி பல வேலைகள் முடிந்த பின்னர், ஷூட்டிங் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அப்படத்தின் கதை திருப்தி அளிக்கவில்லை என கூறி விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கினர்.

இதையும் படியுங்கள்... யூடியூபர் இயக்கத்தில் நயன்தாரா... ‘மண்ணாங்கட்டி’க்காக லேடி சூப்பர்ஸ்டார் உடன் மீண்டும் கூட்டணி அமைத்த யோகிபாபு

director vignesh shivan

இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட் செய்து அப்படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்தனர். ஆனால் அதன்பின் அப்படம் குறித்த எந்த வித அப்டேட்டும் வெளிவரவில்லை. இது ஒருபுறம் இருக்க விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்த படத்தை யாரை வைத்து இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வந்த நிலையில், அதுகுறித்த சூசகமான அறிவிப்பை அவரே வெளியிட்டு இருக்கிறார்.

Pradeep ranganathan, vignesh shivan

அதன்படி விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பை சூசகமாக இருவரும் அறிவித்துள்ளனர். விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த பிரதீப் ரங்கநாதன், இந்தாங்க டேட்ஸ் என பேரிச்சம்பழத்தை கொடுத்தார். அதை அன்போடு வாங்கிக்கொண்ட விக்னேஷ் சிவன், சரியான நேரத்தில் டேட்ஸ் கொடுத்து காப்பாற்றியதற்கு நன்றி என கூறி உள்ளார். இதன் மூலம் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோ என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஜவான் பட விழாவுக்கு நோ சொல்லிவிட்டு.. அம்பானி வீட்டு விழாவில் கலந்துகொள்ள ஓடோடி வந்த நயன்தாரா - ஷாக் ஆன ஷாருக்

click me!