கையில் சரக்கு பாட்டில்...ஆண் நண்பர்களுடன் வேற லெவல் கவர்ச்சி ஆட்டம், கோமாளி பட நடிகையை விமர்சிக்கும் நெட்டிசன்

First Published May 23, 2022, 10:00 AM IST

Samyuktha Hegde Post: கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே கையில் சரக்குடன் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. 
 

samyuktha-hegde

நடிகை சம்யுக்தா ஹெக்டே, கடந்த 2019-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான வாட்ச்மேன் படத்தில்,  ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும், இவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி படமாகும். இந்த படத்தில்  நடிகை சம்யுக்தா ஹெக்டே அவரின் முன்னாள் காதலியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

samyuktha-hegde

சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மன்மத லீலை படத்திலும், அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா. இப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். வயசான கணவர் ஜெய பிரகாஷ் இடமிருந்து தனது கள்ளக் காதலனை ஒளித்து வைக்க அவர் படும் போராட்டக் காட்சிகள் இளசுகள் மத்தியில் வேறலெவல் வரவேற்பை பெற்றது. 
 

samyuktha-hegde

சம்யுக்தா ஹெக்டே, பிரபுதேவாவின் தேள் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து தன்னுடைய மிரட்டல் கவர்ச்சி காட்டி வருகிறார். தற்போது, கன்னடத்திலும் வரிசையாக 3 படங்களில் நடித்து வருகிறார். 

samyuktha-hegde

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அண்மையில், ஹாலிவுட் நடிகைகளை மிச்சும் அளவிற்கு பிகினி போஸ் கொடுத்து அசத்தினார்.  இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

samyuktha-hegde

இந்நிலையில், தற்போது சம்யுக்தா ஹெக்டே தனது ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் கடந்த 4 நாட்களாக கலந்து கொண்டுள்ளார். இதில் ஒரு படி மேலே போய், சரக்கும், டான்ஸுமாக ஒரே ஆட்டம் போட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது கொஞ்சம்  ஓவர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 மேலும் படிக்க.... Esha Gupta Hot: சட்டை பட்டனை கழற்றி விட்டு படு கன்றாவி போஸ் கொடுத்த ஈஷா குப்தா..திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

click me!