என்னை பத்தினி லிஸ்டில் போடாதீங்க.. எனக்கு அது கவலையும் இல்லை.. நடிகை ரேகா நாயர் ஓபன் டாக்..

First Published May 27, 2024, 4:10 PM IST

மெரினாவில் எந்த பத்தினிக்கும் சிலை வைத்ததே கிடையாது. என்னை நீங்கள் பத்தினி லிஸ்டில் போட வேண்டாம் என்று நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான ரேகாநாயர் வம்சம், பகல்நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

Rekha Nair

மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதனுடன் நடு ரோட்டில் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வரும் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் பயில்வான் ரங்கநாதன் இறந்துவிட்டால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்று கூறியிருந்தார்.

Latest Videos


Actress Rekha Nair

இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ரேகா நாயர் தனது மகளுடன் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் பேசிய அவர் “ எனக்கு இப்போது 38 வயதாகிறது. எனக்கு இப்போது இருக்கும் தைரியம் என் மகளுக்கு 15 வயதிலேயே இருக்கிறது. நான் எந்த விதமான பிரச்சனைகளை சந்தித்தேன் என்பதை என் மகள் பார்த்து வளர்ந்தாள். நான் 10-ம் வகுப்பு படிக்கும் போதே எல்லா அவமானங்களையும் சந்தித்துவிட்டேன்.

Rekha Nair

அதில் இருந்து கிடைத்த அனுபவத்தை பார்த்து பார்த்து என் மகள் வளர்ந்தாள். இந்த சமூகத்தில் நடப்பதை எல்லாம் பார்த்து என் மகளிடம் ஒன்றே ஒன்று தான் கூறுவேன். என்ன நடந்தாலும் என்னிடம் ஓபனாக சொல்லிவிடு. நீ யாரையாவது காதலித்தாய் என்றால் கூட என்னிடம் சொல்.. நல்லவனாக இருந்தால் ஓ.கே. கெட்டவனாக இருந்தால் கட் பண்ணிவிடுவேன். 

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு எல்லாமே பிரச்சனை தான். நிறைய முடி இருந்தாலும் பிரச்சனை. இல்லாவிட்டாலும் பிரச்சனை. ஒரு பெண் ஒரு செருப்பு வாங்கினால் கூட அதை சமுதாயம் வேறு கண்னோட்டத்தில் தான் பார்க்கிறது. நான் சென்னைக்கு வந்த போது எனக்கு ஒரு நிகழ்ச்சிக்கு 300 ரூபாய் தான் சம்பளம். நான் பட்ட கஷ்டமெல்லாம் யாருக்கும் தெரியாது.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ ஏதாவது நல்லது செய்ய போனால் கூட அது பிரச்சனையாகி விடுகிறது. விஜே சித்ரா வழக்கில் இன்று வரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறேன். அவரின் குடும்பத்தினர் கூட கோர்ட்டுக்கு போவதை நிறுத்திவிட்டார்கள். ஆனால் நான் போய்க்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு வலிக்கிறது என்று சொன்னால் அதை பிரச்சனை என்கின்றனர்.

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தால் கெட்டப் பெண் என்கின்றனர். எனக்கு உங்களின் மரியாதையோ, அங்கீகாரமோ வேண்டாம் அல்லது பொன்னாடையோ வேண்டாம். மெரினாவில் எந்த பத்தினிக்கும் சிலை வைத்ததே கிடையாது. என்னை நீங்கள் பத்தினி லிஸ்டில் போட வேண்டாம். எனக்கு அது கவலையே இல்லை” என்று கூறினார். 

click me!