IRCTC Tour: ரூ. 14,500 -ல் சென்னையில் இருந்து தஞ்சாவூர் , நவக்கிரக ஸ்தலங்களுக்கு டூர்; சூப்பர் ஆஃபர்!!

By Ansgar RFirst Published Sep 5, 2024, 11:15 PM IST
Highlights

IRCTC Tour Package : ஒவ்வொரு வியாழக்கிழமையும் தென்னிந்தியாவின் அழகை கண்டுகளிக்க IRCTC ஒரு சிறப்பான பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.

IRCTCஐ பொருவத்தவரை மலிவான விலையில் சிறப்பான பல டூர் பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு வியாழனும் சென்னையில் இருந்து புறப்படும் புதிய நவகிரக பேக்கேஜ் ஒன்றை இப்பொது IRCTC அறிமுகம் செய்துள்ளது. இந்த பேக்கேஜ் 8 இரவுகள் மற்றும் 9 பகல்கள் கொண்ட ஒரு நீண்ட பேக்கேஜ் ஆகும். அதுமட்டுமல்லாமல் இதில் 4 இரவுகள் மற்றும் 5 பகல்கள் கொண்ட அமைப்பும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு வியாழன்றும் சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் நவகிரக ஸ்தலங்கள் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு செல்லும். அதனால் தான் இது சென்னை நவகிரக பேக்கேஜ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் இப்பொது துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பேக்கேஜை பொறுத்தவரை ஒருவராக செல்வதை விடகூட்டாக செல்லும்போது தான் குறைவான கட்டணத்தில் செல்லமுடியும். 

Latest Videos

ரயில்களில் வெள்ளை நிற பெட்ஷீட்கள் வழங்கப்படுவது ஏன்? இதுதான் காரணமா?

கட்டண விவரம் 

இந்த பேக்கேஜின் அடிப்படை கட்டணம் 14,500 ரூபாய் ஆகும். ஆனால் அதுவே நீங்கள் தனி ஆளாக செல்லும் பொழுது இதே பேக்கேஜிற்கு சுமார் 35,080 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. நீங்கள் இருவராக செல்லும் பொழுது சுமார் 18,900 ரூபாயும், நீங்கள் மூவராக இணைந்து செல்லும் பொழுது ஒருவருக்கு தல 14,610 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. மேலும் உங்களுடைய பயணத்தின் பொழுது 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பின், அவர்களுக்கு தனியாக படுக்கை வசதி செய்து தரப்படும், அவர்களுக்கான கட்டணம் சுமார் 8,730 ரூபாய் ஆகும்.

Unlock the mysteries of the cosmos with our Navaghra Temple tour!

Destinations: Navaghra & Tanjore
Package Price: ₹14,500/- onwards per person*

Venture into a realm where ancient spirituality and timeless beauty intertwine. Reserve your seats for this cosmic journey now on… pic.twitter.com/vQnnnDMXt8

— IRCTC (@IRCTCofficial)

கேன்சல் பாலிசி  

மேலும் நீங்கள் முன்பதிவு செய்த பிறகு இந்த டூர் பேக்கேஜை ரத்து செய்யும் பட்சத்தில் நீங்கள் ரத்து செய்யும் தேதிகளுக்கு தகுந்தார் போல ஒரு தொகை பிடித்தம் (அபராதமாக) செய்யப்படும். அதன்படி இந்த டூருக்கு செல்வதற்கு 15 நாட்களுக்கு முன்பாக நீங்கள் இந்த பயணத்தை ரத்து செய்தால் 250 ரூபாயும், 8 முதல் 14 நாட்களுக்குள் முன்பாக நீங்கள் இதை ரத்து செய்தால் மொத்த பேக்கேஜ் பணத்தில் 25 சதவீதமும், டூர் செல்லும் நான்கு முதல் ஏழு நாட்களுக்கு இடையில் நீங்கள் இந்த பயணத்த ரத்து செய்தால் 50 சதவிகிதமும்,  நான்கு நாட்களுக்கு குறைவாக நேரம் இருக்கும் பொழுது இந்த பேக்கேஜை ரத்து செய்தால் எந்த விதமான பணமும் திரும்பத் தரப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

RRB NTPC Recruitment : ரயில்வேயில் 11,558 காலியிடம்; 12ம் வகுப்பு முடித்தாலே போதும்! கை நிறைய சம்பளம்!

click me!