Asianet News TamilAsianet News Tamil

RRB NTPC Recruitment : ரயில்வேயில் 11,558 காலியிடம்; 12ம் வகுப்பு முடித்தாலே போதும்! கை நிறைய சம்பளம்!

மத்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் உள்ளிட்ட 11,558 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

RRB NTPC Recruitment 2024 ...Eligibility how to apply tvk
Author
First Published Sep 3, 2024, 12:28 PM IST | Last Updated Sep 3, 2024, 2:17 PM IST

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே துறையில் பணியில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்பது நாடு முழுவதும்  உள்ள படித்த இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. ரயில்வே துறைகளில் அவ்வப்போது காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில், ரயில்வேயில் காலியாக உள்ள  11,558 பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்,  ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை: 

11,558

காலியிடங்களின் விபரம்: 

* சீப் கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736 

* ஸ்டேஷன் மாஸ்டர் - 994 

* சரக்கு ரயில் மேலாளர் - 3,144 

*  ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் - டைப்பிஸ்ட் - 1,507 

*  சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட் - 732 

*  கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க் - 2,022 

*  கணக்கு எழுத்தர் - தட்டச்சர் - 361 

*  ஜூனியர் கிளார்க் - தட்டச்சர் - 990 

*  ரயில்கள் கிளார்க் - 72

கல்வி தகுதி: 

வணிக தலைமை - டிக்கெட் சூப்பர் வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது தகுதி : 

டிகிரி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். 12ம் வகுப்பு தகுதி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. 

 மாதம் சம்பளம்

Chief Commercial – Ticket Supervisor – 35,400 

ஸ்டேஷன் மாஸ்டர் – 35,400

சீனியர் கிளர்க் – 29,200

கமர்ஷியல் டிக்கெட் கிளார்க் - 21,700

இதர பணியிடங்களுக்கு - 19,900 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டணம்: 

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500- செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 திருப்பி அளிக்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி :

 13.10.2024

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios