அட..! சிக்கனில் வடை கூட செய்யலாமா..? ரெசிபி இதோ..!

By Kalai Selvi  |  First Published Sep 5, 2024, 5:56 PM IST

Chicken Vadai Recipe : இந்த கட்டுரைகள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிக்கனில் வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு, ஏதாவது வித்தியாசமான சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஆனால், என்ன செய்வது என்று தெரியவில்லையா? உங்களுக்கான பதிவு தான் இது.

சிக்கன் என்றாலே குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, அந்த சிக்கனில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு வடை செய்து கொடுங்கள். என்ன சிக்கனில் வடையா என்று யோசிக்கிறீர்களா? இந்த வடை சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். பொதுவாக, வடையில் பருப்பு வடை, உளுந்த வடை கார வடை கீரைவடை என்று என பலவகை உண்டு. எனவே, கொஞ்சம் வித்தியாசமாக சிக்கனில் இப்படி வடை செய்து கொடுங்கள். உங்கள் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சிக்கன் வடை செய்வதற்கு ரொம்பவே எளிமையாக இருக்கும் சரி வாங்க... இப்போது இந்த கட்டுரைகள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிக்கனில் வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  ஈவினிங் டைம்ல டீக்கு மீல்மேக்கர் வச்சி இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!

சிக்கன் வடை செய்ய தேவையான பொருட்கள் :

சிக்கன் - 300
கடலை பருப்பு - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 3/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  ஈவினிங் ஸ்நாக்ஸிக்கு சத்தான வாழைப்பூ வடை.. ரெசிபி இதோ!

செய்முறை :

சிக்கனில் வடை செய்ய முதலில், எடுத்து வைத்த சிக்கனை சிக்கனை நன்றாக கழுவி கொள்ளுங்கள். பிறகு கடலை பருப்பை கழுவி ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் சிறிதளவு கடலைப்பருப்பை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் சிக்கன், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சுமார் ஐந்து விசில் விட்டு வேக வைத்து இறக்கவும். குக்கரில் விசில் போனவுடன் சிக்கனில் இருக்கும் எலும்புகளை நீக்கி, சிக்கனை துண்டுகளாக உதிர்க்கவும்.

இதனை அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கடலை பருப்பு, சிக்கன் துண்டுகள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தனியாக எடுத்து வைத்த ஊறிய கடலை பருப்பை சேர்த்து ஒரு முறை மாவை பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவில் சிறிதளவு எடுத்து கையில் வடை போல தட்டி அதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக எடுக்கவும். இப்படியே எல்லா மாவுகளையும் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் ருசியான சிக்கன் வடை ரெடி. இந்த வடையுடன் நீங்கள் சட்டினி அல்லது சாஸ் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!