ஈவினிங் டீ காபிக்கு இப்படி பிரட்டில் பஜ்ஜி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!

By Kalai Selvi  |  First Published Sep 4, 2024, 5:31 PM IST

Bread Bajji Recipe  : இந்தக் கட்டுரையில் பிரட்டில் பஜ்ஜி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


ஈவினிங் நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது அதனுடன் வடை, பஜ்ஜி சாப்பிடுவது பலரும் விரும்புவார்கள். அந்த லிஸ்டில் நீங்களும் இருந்தால்,  இந்த கட்டுரையை தொடர்ந்து படிங்கள். ஏனென்றால், உங்களுக்காக ஒரு சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி கொண்டு வந்துள்ளோம்.

நீங்கள் எப்போதும் டீ காபி குடிக்கும் போது, அதனுடன் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி தான் சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் ஒருமுறை பிரட்டில் பஜ்ஜி செய்து சாப்பிடுங்கள். இந்த பஜ்ஜி சற்று வித்தியாசமான சபையில் சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். மேலும், எளிமையான முறையில் விரைவில் செய்து முடித்திடலாம். முக்கியமாக, பள்ளி முடிந்து பசியோடு வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு, இந்த பஜ்ஜி செய்து கொடுங்கள். அவர்கள் வயிறும்ம் நிரம்பும், அவர்கள் அதை விரும்பியும் சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பிரட்டில் பஜ்ஜி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  ஈவ்னிங் ஸ்னாக்ஸிற்கு பெஸ்ட்-குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் கிரிஸ்பி அண்ட் கிரன்ச்சி சில்லி சீஸ் பஜ்ஜி!

பிரட் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள் :

பிரட் துண்டுகள் - 5
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சோடா உப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு சூப்பரான முட்டை ஆனியன் பஜ்ஜி! எத்தனை சாப்பிட கொடுத்தாலும் பத்தல என்பார்கள்!

செய்முறை :

பிரட் பஜ்ஜி செய்ய முதலில், எடுத்து வைத்த பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதை முக்கோண வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைத்த கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டு, ஒரு முறை நன்றாக கலக்கவும். பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும், பிரட் துண்டுகளை கரைத்து வைத்த பஜ்ஜி மாவில் நன்கு முக்கி பிறகு அதை எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு, நன்கு வேகவைத்து எடுக்கவும்.. இப்படி எல்லா பிரட் துண்டுகளையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான பிரட் பஜ்ஜி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!