மதிய உணவுக்கு பிறகு தயிர் சாப்பிடுவது ஏன் அவசியம்?

By Kalai Selvi  |  First Published Sep 4, 2024, 10:24 AM IST

Curd Benefits : மதியம் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.


தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அந்தவகையில், தயிரை மதிய உணவிற்கு பிறகு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

ஆம், உண்மையில் தயிரை மதியம் உணவுக்குப் பிறகு சாப்பிடுவது ரொம்பவே நல்லது. ஏனெனில், நம்மில் பலர் மதியம் கனமான உணவை சாப்பிடுவோம். அதிலும், குறிப்பாக சிலர் சாப்பிட்ட பிறகு உடனே தூங்கிவிடுவார்கள். இதனால் அசிடிட்டி வயிற்று உப்புசம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மதியம் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  தயிருடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் போதும்; பெண்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்!

மதியம் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் :

1. செரிமானத்தை எளிதாக்கும் :

தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன இது நல்ல பாக்டீரியா என்று அழைக்கப்படுகிறது. இது செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. இதனுடன் குடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, மலச்சிக்கல், வாயு அமலத்தன்மை மற்றும் வயிற்று தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கும். 

2. அமிலத்தன்மை பிரச்சனையை நீக்கும் :

பலருக்கு மதிய சாப்பிட்ட பிறகு அமிலத்தன்மை பிரச்சனை உண்டாகும். அத்தகைய நபர்கள் மதியம் உணவுக்கு பிறகு தயிர் எடுத்துக் கொண்டால், இந்த பிரச்சனை குறையும். உண்மையில் தயிர் அமிலத்தன்மை எதிர்த்து போராட உதவுகிறது. குறிப்பாக, நீங்கள் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிட்டால் உடலில் உள்ள அமில பிஹெச் நடுநிலையாக்கும். வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தை குறைக்கும். இதன் மூலம் அமிலத்தன்மை பிரச்சினையை போக்கும்.

3. காரமான உணவின் தீங்கை குறைக்கும் :

காரமான உணவை அதிகமாக சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, கரமான உணவை மதியம் சாப்பிட்டால், இந்த பிரச்சினையை மேலும் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், காரமான உணவிற்குப் பிறகு தயிர் சாப்பிட்டால், எந்தவித பாதிப்பும் ஏற்படாது. காரணம், தயிரில் குளிர்ச்சியான பண்புகள் உள்ளது. இது தவிர, நெஞ்செரிச்சல் பிரச்சனையையும் இது குறைக்கும். இதனால் தான் பலர் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடுவார்கள்.

இதையும் படிங்க: தயிருடன் உப்பு அல்லது சர்க்கரை... இந்த ரெண்டில் எது நல்லது? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

4. மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் :

தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமான அமைப்பின் செயல்பாட்டை விரிவுபடுத்த பெரிதும் உதவுகிறது. முக்கியமாக, தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும். உண்மையில் தயிரில் உள்ள இந்த புரோபயாடிக்குகள் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும் இந்த பாக்டீரியாக்கள் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் மற்றும் லாட்டிக் அமிலத்தை உருவாக்குகிறது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, உணவை விரைவாக ஜீரணிக்க செய்து, வயிற்றை சுத்தப்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை சுலபமாக நீக்குகிறது.

5.  மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும் :

மதிய உணவிற்கு பிறகு தயிர் சாப்பிட்டால் உங்களது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும் தெரியுமா? உண்மையில், தயிர் மனநிலையை புத்துணர்ச்சி ஆக்குகிறது மற்றும் மூளையில் புதிய முறையில் வேலை செய்ய தொடங்குகிறது. இது தவிர, தயிரில் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கும் நீர், உங்களை நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் சாப்பிட்ட பிறகு அஜீரணக் கோளாறு ஏற்படாது. 

6. உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது :

மதிய உணவிற்கு பிறருக்கு தயிரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையை சுலபமாக கட்டுப்படுத்தலாம். ஏனெனில், இது வயிற்றை நிரம்பி இருக்கும் உணர்வை தருகிறது. இதன் காரணமாக அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. மேலும், தயிரில் இருக்கும் புரதம் பசியை குறைக்க உதவுகிறது.

7. சருமத்திற்கு நன்மை பயக்கும் :

தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதோடு மட்டுமின்றி, முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது.

மேலே சொன்ன அனைத்து நன்மைகளையும் நீங்கள் பெறவிரும்பினால், தினமும் மதிய உணவிற்கு பிறகு கண்டிப்பாக தயிர் சாப்பிடுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!