இளநீரை அளவுக்கு அதிகமாக குடிச்சா ஆபத்தா? உண்மை என்ன?

By Kalai Selvi  |  First Published Sep 4, 2024, 7:30 AM IST

Coconut Water Side Effects : 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழி போல, இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால், உடலில் எந்த மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.


இளநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஏனெனில், இதில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இளநீர் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். ஆனால், இந்த நீரை அளவுக்கு அதிகமாக குடித்தால், பல பிரச்சினைகள் வரும் என்கின்றன நிபுணர்கள். காரணம், அதில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு தான். குறிப்பாக, சில உடல்நல பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ரொம்பவே ஆபத்து. எனவே, எந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு இளநீர் தீங்கு விளைவிக்கும் என்பதை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இளநீர் நல்லதல்ல :

Tap to resize

Latest Videos

1. பிபி : 

உங்களுக்கு ஏற்கனவே குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை இருந்தாலோ அல்லது நீங்கள் பிபி -க்கானா மாத்திரையை எடுத்துக் கொண்டாலோ இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால், அது உங்களது சளி மற்றும் பிரச்சினையை இன்னும் மோசமடையச் செய்யும். எனவே, கவனமாக இருங்கள்.

2. வயிற்றுப்போக்கு: 

உங்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது லூஸ் மோஷன் இருந்தால் இளநீரை ஒருபோதும் குடிக்கவே கூடாது. மீறினால், உடலின் நீரின் அளவு அதிகரித்து, இந்த பிரச்சனையை இன்னும் மோசமாகும்.

3. சளி மற்றும் இருமல் : 

சளி மற்றும் இருமலால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், இளநீரை அளவுக்கு அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருப்பதால், அது சளி இருமலை இன்னும் அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  இளநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? எந்த நேரத்தில் குடிப்பது சிறந்தது?

4. சிறுநீரகப் பிரச்சனை :

உங்களுக்கு சிறுநீரகப் பிரச்சனை இருந்தால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இளநீரை குடிக்க கூடாது. ஏனெனில், இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது, இது  சிறுநீரகத்தை இன்னும் மோசமாக பாதிக்கும்.

5. உடல் எடையை குறைப்பவர்கள் :

நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், இளநீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இதில் அதிகளவு கலோரிகள் இருக்கிறது. மீறி குடித்தால், உடலில் கலோரிகள் அளவு அதிகரித்து, உங்களது எடையை இன்னும் அதிகரிக்க செய்யும்.

இதையும் படிங்க:  உடல் எடை குறைய தேங்காய் நீரில் இதை மட்டும் கலந்து குடியுங்கள்! நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க...

6. அறுவை சிகிச்சை செய்திருந்தால்:

நீங்கள் சமீபத்தில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்திருந்தால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இளநீரை குடிக்க வேண்டாம். மீறினால், உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது கடினம்.

7. சர்க்கரை நோய் :

சர்க்கரை நோயாளிகளுக்கு இளநீரை நல்லது என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. ஏனெனில், ஒரு கப் இளநீரில்  தோராயமாக 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, நீங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இளநீரை குடிக்க வேண்டாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!