ஈவினிங் டீ, காபிக்கு சுட சுட காளான் பஜ்ஜி செஞ்சி சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published Sep 3, 2024, 5:37 PM IST
Highlights

Kaalan Bajji Recipe : இந்த கட்டுரையில் காளான் பற்றி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எப்போதும் கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி கொடுக்காமல்,  வீட்டில் செய்து கொடுங்கள். ஆனால், விரைவில் அப்படி என்ன ஸ்னாக்ஸ்
செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு.

உங்கள் வீட்டில் காளான் இருக்கிறதா? அப்படியானால் அதில் பஜ்ஜி செய்து கொடுங்கள். மாலை வேளையில் டீ காபி குடிக்கும் போது அதனுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு இந்த காளான் பஜ்ஜி ஏற்றதாக இருக்கும். இந்த காளான் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும் மற்றும் செய்வதும் சுலபமாக இருக்கும். முக்கியமாக, உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அதன் சுவை அப்படி அருமையாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் காளான் பற்றி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  ஈவ்னிங் ஸ்னாக்ஸிற்கு பெஸ்ட்-குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் கிரிஸ்பி அண்ட் கிரன்ச்சி சில்லி சீஸ் பஜ்ஜி!

காளான் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள் :

காளான் - 200 (நறுக்கியது)
மைதா - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு சூப்பரான முட்டை ஆனியன் பஜ்ஜி! எத்தனை சாப்பிட கொடுத்தாலும் பத்தல என்பார்கள்!

செய்முறை :

காளான் பஜ்ஜி செய்ய முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை தண்ணீர் ஊற்றி அதே அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். அந்த பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி, சூடான நீரில் காளானை சுமார் 2 நிமிடம் ஊற வைக்கவும். காளான் நன்கு ஊறியதும் அதை வடிகட்டி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு மிளகாய்த்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனுடன் காளானையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில், கலந்து வைத்த காளானை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு, நன்கு வேகவைத்து பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான காளான் பற்றி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!