மூட்டு வலிக்கு சத்தான பிரண்டை சட்னி.. எப்படி செய்யணும் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Sep 4, 2024, 6:30 AM IST

Pirandai Chutney Recipe : இந்த கட்டுரையில் பிரண்டை சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


தினமும் காலை இட்லி அல்லது தோசைக்கு தேங்காய் சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் ஆரோக்கியமான. அப்படியானால், உங்கள் வீட்டில் பிரண்டு இருந்தால் அதில் சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த பிரண்டை சட்னி கை, கால், மூட்டு வலியை சரி செய்யும். முக்கியமாக இது மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது. எனவே, அவர்கள் அடிக்கடி கூட இந்த சட்னியை செய்து சாப்பிடலாம்.

அதுமட்டுமின்றி இந்த சட்னி எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும்.   இந்த பிரண்டை சட்னியை நீங்கள் இட்லி தோசை மட்டுமின்றி, சூடான சாதத்திற்கு கூட வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பிரண்டை சட்னி செய்து கொடுங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பிரண்டை சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  குட்டீஸ்கள் கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கிறார்களா? இப்படி சட்னி செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க!

பிரண்டை சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

பிரண்டை - 1/2 கப்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 10
இஞ்சி - அரை துண்டு
துருவிய தேங்காய் - 1/4 கப்
புளி - சிறிதளவு
கடுகு - 1/ 4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு -  1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  இட்லி, தோசைக்கு இப்படி ஒருமுறை சட்னி செஞ்சு கொடுங்க.. எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிடுவாங்க!

செய்முறை :

பிரண்டை சட்னி செய்ய முதலில், எடுத்து வைத்த பிரண்டையின் தோல் முனை பகுதி ஆகியவற்றை நீக்கிவிட்டு தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடலைப்பருப்பு, 4 வார மிளகாய் ஆகியவற்றை வருது தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பூண்டு, பிரண்டை, புளி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பிறகு அவற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.

அடுத்து வறுத்த அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டவும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், 1 வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் தாளித்த இதனை தயாரித்து வைத்த சட்டியுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் ருசியான பிரண்டை சட்னி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!