Coconut Dosai Recipe : இந்த கட்டுரையில் தேங்காய் தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தென்னிந்திய காலை, இரவு உணவுகளில் மிகவும் பிரபலமானது எதுவென்றால், அது இட்லி மற்றும் தோசை தான். அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நீங்களும் தோசை பிரியர் என்றால், உங்களுக்கான பதிவு தான் இது.
ஆம், தோசையில் பல வகைகள் உண்டு. ஆனியன் தோசை, ரவை தோசை, மாசாலா தோசை, கேரட் தோசை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அதன் லிஸ்ட் பெருசு. அந்த வகையில் இன்று உங்களுக்காக ஒரு வித்தியாசமான சுவையில் தோசை ரெசிப்பி தான் கொண்டு வந்துள்ளோம். அது வேற ஏதும் இல்லைங்க தேங்காய் தோசை தான். தேங்காய் தோசை மற்ற தோசைகளை போல் அல்லாமல் மென்மையாகவும், சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த தோசை செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். இந்த தோசையை நீங்கள் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க ... இப்போது இந்த கட்டுரையில் தேங்காய் தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உடல் எடை குறையனுமா? உங்களுக்கான சத்தான தோசை.. டேஸ்ட் செமையா இருக்கும்!
தேங்காய் தோசை செய்ய தேவையான பொருட்கள் :
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை அரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1/4 கப்
தேங்காய் - 1 கப் (துருவல்)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: காலை டிபனுக்கு மொறு மொறுன்னு டேஸ்டான சிறுதானிய தோசை.. ரெசிபி இதோ!
செய்முறை :
தேங்காய் தோசை செய்ய முதலில் எடுத்து வைத்த புழுங்கல் அரிசி, உளுந்து பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக கழுவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவை நன்கு ஊறியதும் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைக்கவும். அரைத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
அதன் பிறகு பச்சரிசியை கழுவி, மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்து இந்த மாவை, ஏற்கனவே அரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு பாத்திரத்தை ஒரு தட்டால் மூடி சுமார் 8 மணி நேரம் அப்படியே வைக்கவும் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
இப்போது மாவை எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு தோசை கல் அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி, கலக்கி வைத்த மாவை தோசை கல்லில் ஊற்றி, இரண்டு பக்கமும் திருப்பி போட்டு நன்கு வேக வைத்து எடுத்தால் டேஸ்ட்டான தேங்காய் தோசை தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D