அடுத்தடுத்து ஹிட் படங்கள்.. ஆடம்பர சொகுசு கார் வாங்கிய பிரியா மணி.. தலை சுற்றவைக்கும் விலை..

First Published Feb 27, 2024, 4:31 PM IST

நடிகை பிரியாமணி வாங்கி உள்ள புதிய சொகுசு கார் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரைப்பிரபலங்கள் புதிதாக எந்த பொருள் வாங்கினாலும் அது கவனத்தை ஈர்க்கும். குறிப்பாக புது கார் வாங்கிவிட்டால், அதன் விலை மாடல் என விவரங்களை ரசிகர்கள் தேடி எடுத்துவிடுகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை பிரியாமணி வாங்கி உள்ள புதிய சொகுசு கார் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..

தமிழில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து பல படங்களில் பருத்திவீரர்ன் படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பிரியா மணி.

தொடர்ந்து ராவணன், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தமிழை தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பேமிலி மேன், ஹிட் ஸ்டோரி, சர்வம் சக்தி மயம் ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். 

சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திலும் பிரியாமணி நடித்திருந்தார். மேலும் ஆர்டிக்கிள் 370, பாமகலாபம் உள்ளிட்ட படங்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

இப்படி பாலிவுட்டில் அடுத்தடுத்து அவரின் படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில் அதனை கொண்டாடும் விதமாக புதிய கார் ஒன்றை பிரியா மணி வாங்கி உள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி என்ற அந்த சொகுசு காரின் விலை ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய காரை தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் சென்று பிரியாமணி வாங்கி உள்ளார். மேலும் கார் வாங்கியதும் ஷோ ரூபில் கேக் வெட்டி பிரியாமணி கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்த புதிய காரை தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் சென்று பிரியாமணி வாங்கி உள்ளார். மேலும் கார் வாங்கியதும் ஷோ ரூபில் கேக் வெட்டி பிரியாமணி கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

click me!