Chinna Thambi Khushbu : அதுக்குள்ள 33 வருஷம் ஆச்சா... நம்பவே முடியல! நடிகை குஷ்புவின் சின்னதம்பி மெமரீஸ்

First Published Apr 12, 2024, 11:55 AM IST

சின்னதம்பி திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்படம் குறித்து நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பி.வாசு இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் சின்னத்தம்பி. இப்படத்தில் நடிகர் பிரபு ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். அந்த சமயத்தில் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய இப்படம் காலம் கடந்து இன்றளவும் கொண்டாடப்படுவதோடு, தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படங்களின் லிஸ்ட்டிலும் இடம்பிடித்து இருக்கிறது.

நடிகர் பிரபு, நடிகை குஷ்பு ஆகியோரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இப்படம். சின்னத்தம்பி படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் பாடல்களும் முக்கிய காரணம். இளையராஜா அப்படத்திற்காக இசையமைத்த பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட் ஆனதோடு காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சின்ன தம்பி திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுகுறித்து நடிகை குஷ்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... அடுத்த 6 மாதத்தில் 7 பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ்... பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அடிச்சு துவம்சம் பண்ண ரெடியான கோலிவுட்

அந்த பதிவில், நேரம் பறக்கிறது என்று சொல்வார்கள், அது மிகவும் உண்மை. சின்னதம்பி திரைப்படம் தமிழக மக்களை புயல் போல் தாக்கி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என்றென்றும் அது எங்கள் வாழ்க்கையை மாற்றிய படமாகும். இன்றுவரை என் மீது அனைவரும் பொழியும் அன்பும், பாசமும், மரியாதையும் நினைத்துப் பார்க்க முடியாதது. அதற்காக ஒவ்வொருவருக்கும் எப்போதும் நான் நன்றியுடனும் இருப்பேன். 

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பி.வாசு சார் மற்றும் எனக்கு பிடித்த நடிகர் பிரபு சார் ஆகியோர் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருப்பார்கள். மறைந்த தயாரிப்பாளர் கே.பாலு எப்போதும் என் நினைவில் இருப்பார். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், எனது துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. கடைசியாக இளையராஜாவுக்கும் மிகப்பெரிய நன்றி. அவரது பாடல்கள் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்கும். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. தலை வணங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Darshan Anju Kurian : மலையாள நடிகையை ரகசியமாக திருமணம் செய்துகொண்டாரா கனா பட ஹீரோ தர்ஷன்? லீக்கான போட்டோஸ்

click me!