"என் உலகமே இவங்க இரண்டு பேர் தான்".. சகோதிரியின் திருமணம்.. மெழுகு சிலை போல தயாரான அதிதி - வைரல் பிக்ஸ்!

First Published Feb 18, 2024, 5:59 PM IST

Aditi Shankar : தனது அக்காவின் திருமணம் நிகழ்விற்கு ஜோராக ரெடியாகியுள்ளார் பிரபல நடிகை அதிதி சங்கர். தனது சமூக வலைதள பக்கங்களில் அந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

Aditi Shankar Brother

பிரபல இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரண்டு மகள்களும், அர்ஜித் என்ற ஒரு மகனும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

மாமன்னன் படத்தில் நடிக்க மாரி செல்வராஜின் பர்ஸ்ட் சாய்ஸ் வடிவேலு இல்லையாம்... இந்த டக்கரான நடிகர் தானாம்!

Actress Aditi Shankar

ஆனால் அவர் முதலில் திருமணம் செய்த ரோஹித் என்ற அந்த இளைஞர், பிரபலமான கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் சிக்கியதை அடுத்து அவரிடம் இருந்து பிரிந்து ஐஸ்வர்யா சங்கர் அவர்கள் விவாகரத்தும் பெற்றார். இந்நிலையில் அவருக்கு தற்பொழுது இரண்டாவது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Actress Aditi

இந்நிலையில் தனது அக்காவிற்கு கிடைத்துள்ள இந்த புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில், தன் சகோதரியின் திருமணத்திற்கு ஜோராக தயாராகி வருகிறார் பிரபல நடிகை அதிதி சங்கர். தனது சமூக வலைதள பக்கங்களில் இது குறித்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

Aditi Shankar

இதனையடுத்து அக்கா ஐஸ்வர்யா சங்கர் அவர்களுக்கு நடந்த நிச்சயதார்த்த விழாவில், தனது சகோதரர் மற்றும் சகோதரியோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், அதற்கு அவர் மேக்கப் போட்டு தயாரான வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

கோடியில் இருந்து லட்சத்துக்கு சரிந்த வசூல்; ஒரே வாரத்தில் ரஜினியின் லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?

click me!