"அந்த இரண்டு படத்திற்கும் செகண்ட் பார்ட் இருக்கு".. ஐடியா வச்சுருக்கேன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த R.J பாலாஜி!

First Published Feb 1, 2024, 10:22 PM IST

Actor RJ Balaji : சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த அந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இயக்குனர் கோகுலுக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றது.

Singapore Saloon

பிரபல நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான "சிங்கப்பூர் சலூன்" திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அந்த திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள், இயக்குனர் கோகுல் அவர்களுக்கு தங்கள் சங்கிலி ஒன்றை பரிசளித்ததோடு மீண்டும் ஒரு திரைப்படத்தில் அவருடன் தனது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இணையும் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக விரும்பும் இளைஞர்கள் இந்த பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்! கபிலன் வைரமுத்து

LKG

அதனையடுத்து இந்த படத்தின் நாயகன் இந்த வெற்றி விழாவில் பங்கேற்று பேசியபொழுது, இந்த திரைப்படத்தினை தனக்கு அளித்த கோகுல் மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு கே.ஆர் பிரபு இயக்கத்தில், தனது நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வழங்கிய LKG படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்கான ஐடியா தன்னிடம் உள்ளதாகவும் ஆர்.ஜே பாலாஜி கூறினார்.

mookuthi amman

அதேபோல ஆர் ஜே பாலாஜி முதல்முறையாக இயக்குனராக களம் இறங்கிய நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆர்.ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த இரு திரைப்படங்கள் மீண்டும் உருவாகுவது பாலாஜியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'முதல்வன்' படத்தில் அர்ஜூனுக்கு முன்பு மூன்று டாப் ஹீரோக்களை அணுகிய இயக்குனர் சங்கர்! யார் யார் தெரியுமா?

click me!