பிகிலுக்கு ஆப்பு வைத்தது முதல் பிரின்ஸை பதம் பார்த்தது வரை... கார்த்தியின் தீபாவளி சம்பவங்கள் ஒரு பார்வை

First Published Nov 10, 2023, 8:37 AM IST

நடிகர் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில், இதற்கு முன் அவர் நடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்கள் பற்றி பார்க்கலாம்.

ஜப்பான்

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பருத்திவீரனில் தொடங்கிய இவரது திரைப்பயணம், பொன்னியின் செல்வன் வரை பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் நிறைந்ததாக உள்ளது. இவர் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவரது 25-வது படமான ஜப்பான் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. தீபாவளி விருந்தாக இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இதற்கு முன் கார்த்தி நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்த படங்கள் பற்றி பார்க்கலாம்.

ஆல் இன் ஆல் அழகுராஜா

நடிகர் கார்த்தி நடித்து முதன்முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. எம்.ராஜேஷ் இயக்கிய இப்படம் கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் ஆரம்பம் மற்றும் விஷாலின் பாண்டியநாடு ஆகிய படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் தோல்வி அடைந்தாலும், அப்படத்தின் காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்றளவும் அந்த காமெடி காட்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காஷ்மோரா

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் தான் காஷ்மோரா. இதில் நயன்தாரா, விவேக், ஸ்ரீதிவ்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படம் தனுஷின் கொடி படத்துக்கு போட்டியாக கடந்த 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்தது. சொதப்பலான திரைக்கதை காரணமாக இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

கைதி

கார்த்திக்கு மறக்க முடியாத தீபாவளி என்றால் அது 2019-ம் ஆண்டு தீபாவளி தான். அந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி திரைப்படம் வெளியானது. அதுவும் விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக கைதி ரிலீஸ் ஆனது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு கம்மியான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டாலும், அப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து நாட்கள் செல்ல செல்ல பிகிலுக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளை கைதி ஆக்கிரமித்ததோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இன்று ரசிகர்கள் கொண்டாடும் எல்சியு-விற்கு பிள்ளையார் சுழி போட்டது கைதி படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்தார்

கார்த்தியின் மற்றுமொரு தீபாவளி ரிலீஸ் படம் தான் சர்தார். இப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கி இருந்தார். இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். கடந்தாண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்துடன் மோதிய சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  Bigg Boss: அட கடவுளே கடைசியில கமல் ஹாசனையே சீண்டி பார்த்த பூர்ணிமா - மாயா! இந்த வாரம் சம்பவம் கன்ஃபாம்!

click me!