Box Office : ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை மூன்றே நாளில் தட்டிதூக்கிய ஆவேஷம் மற்றும் வர்ஷங்களுக்கு சேஷம்

First Published Apr 14, 2024, 11:35 AM IST

மலையாளத்தில் அண்மையில் ரிலீஸ் ஆன ஆவேஷம் மற்றும் வர்ஷங்களுக்கு சேஷம் ஆகிய திரைப்படங்கள் ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை மூன்றே நாளில் எட்டிப்பிடித்துள்ளது.

aavesham and varshangalkku shesham

நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான 'வர்ஷங்களுக்கு சேஷம்' ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது. திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிவின் பாலியின் தனித்துவமான நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. 

Aavesham vs Varshangalkku Shesham

'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் அவரது பர்பார்மன்ஸ், அவர் ஆற்றல்மிக்க  நடிகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் மட்டுமல்லாமல் இத்திரைப்படம் சினிமா ரசிகர்களின் ரசனையை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. இந்தத் திரைப்படம், 70 கள் மற்றும் 80களில் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்வியலை பற்றியதாகும். சினிமா ரசிகர்களின் மையமாக திகழும் கோடம்பாக்கம் பல திரைப்பட தயாரிப்பாளர்களின் வெற்றியையும், புகழையும், தோல்விகளையும் கண்டது. இந்த நகரம்தான் படத்தின் கதைக்கள பின்னணி. 

இதையும் படியுங்கள்... Aranmanai 4 : விஷாலுடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோத ரெடியான சுந்தர் சி... அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Varshangalkku Shesham Box Office

'வர்ஷங்களுக்கு சேஷம்' வலிமையான மற்றும் அழுத்தமான கதைகளத்தையும், திறமையான சக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளதால் ஒரு ஹைடெக்கான சினிமா அனுபவத்தையும் தருகிறது. மேலும் இந்த திரைப்படம் உலகளவில் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இப்படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலகளவில் ரூ.30 கோடி வசூலைத்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

Aavesham Box Office

இப்படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன பகத் பாசிலின் ஆவேஷம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்து வருகிறது. ஆவேஷம் திரைப்படத்தில் ரங்கா என்கிற கேரக்டரில் தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் பகத் பாசில். ஆவேஷம் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ.33 கோடி வசூலித்து இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குமே தமிழ்நாட்டிலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த லால் சலாம் படத்தின் லைப் டைம் வசூலே ரூ.30 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Aranthangi Nisha : தமிழ் புத்தாண்டன்று புது பிசினஸ் தொடங்கிய அறந்தாங்கி நிஷா - குவியும் வாழ்த்துக்கள்

click me!