ஒரே வருடத்தில் ரூ.400 கோடி வருமானம்... சினிமாவில் இருந்து விலகி பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் பிரபல நடிகை

First Published May 2, 2024, 10:54 AM IST

சினிமாவில் பேமஸ் ஆக நடித்து வந்த நடிகை ஒருவர், நடிப்புக்கு முழுக்கு போட்டு பிசினஸில் இறங்கி ஒரே வருடத்தில் ரூ.400 கோடி சம்பாதித்துள்ளார்.

சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நாயகிகள் அதில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா, லிப்பாம், 9ஸ்கின் போன்ற நிறுவனங்கள் மூலம் கோடி கோடியாய் வருமானம் ஈட்டி வருகிறார். இதுதவிர பெமி9, டிவைன் புட்ஸ், சாய் வாலே போன்ற நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்திருக்கிறார்.

Hindi Actress aashka goradia

நயன்தாராவை போல் நடிகை சமந்தாவும் சொந்தமாக சாஹி என்கிற ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுதவிர மழலையர் பள்ளி ஒன்றையும் நடத்தி வரும் சமந்தா, ஈ காமர்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்திருக்கிறார். அண்மையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறார் சமந்தா. ஆனால் இவர்களை விட பிசினஸில் இரண்டே ஆண்டுகளில் ரூ.400 கோடி வருமானம் ஈட்டிய நடிகையை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

இதையும் படியுங்கள்... Tejaswini : கருப்பு உடையில் மைல்டு கவர்ச்சியில் கூல் போஸ்.. அசத்தும் நடிகை தேஜஸ்வினி சர்மா - ஹாட் பிக்ஸ் இதோ!

aashka goradia Business

அவர் பெயர் ஆஷ்கா கொராடியா. இவர் இந்தியில் கடந்த 2002ம் முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஜீ டிவி, சோனி டிவி என பல்வேறு முன்னணி சேனல்களில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து பேமஸ் ஆன கொராடியா, கடைசியாக 2019-ம் ஆண்டில் ஒளிபரப்பான தாயன் என்கிற தொடரில் நடித்தார். அதன் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை ஆக்‌ஷா கொராடியா, பிசினஸில் களமிறங்கினார். ரெனீ என்கிற அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்.

aashka goradia cosmetic Business

அவர் தொடங்கிய அந்நிறுவனம் இரண்டே ஆண்டுகளில் 100 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பு ரூ. 834 கோடி மதிப்பை எட்டியது. குறிப்பாக 2024 நிதியாண்டில் மட்டும் ஆக்‌ஷா கொராடியாவுக்கு சொந்தமான ரெனீ நிறுவனம் ரூ.400 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது. ஒரு தொழிமுனைவோராக ஆக்‌ஷா கொடிகட்டிப்பறப்பதை பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். நடிகைகள் நயன்தாரா, சமந்தா போன்றவர்களே பிசினஸில் இந்த அளவுக்கு சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அடிக்குற வெயிலுக்கு இதமாக... பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்ட கேத்ரின் தெரசா - ஹாட் கிளிக்ஸ் இதோ

click me!