கொரோனாவில் இருந்து கோலிவுட்டை காப்பாற்றிய படம்... விஜய்யின் மாஸ்டர் பற்றி பலரும் அறிந்திடாத சீக்ரெட்ஸ் இதோ

First Published Jan 13, 2024, 11:22 AM IST

லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன மாஸ்டர் படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

நடிகர் விஜய்யின் கெரியரில் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது மாஸ்டர் தான். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். விஜய்யும் லோகேஷும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிக்கப்பட்டது. 2020-ல் கோலிவுட் கொண்டாடிய கடைசி விழா என்றால் அது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தான்.

ஏனெனில் 2020-ம் ஆண்டை யாரலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கொரோனா என்கிற கொடூர நோய் உலகையே முடக்கியதோடு பல லட்சம் உயிர்களையும் பறித்தது. கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் போடப்பட்டதால் பல்வேறு தொழில்கள் முடங்கின. அதிலும் இந்த காலகட்டத்தில் அதிகம் பாதிப்பை சந்தித்தது திரையுலகம் தான். சினிமா படப்பிடிப்புகள் நடத்த முடியாமல், புதுப்படங்களை தியேட்டரில் வெளியிட முடியாமல் போனதால் சினிமா தொழிலே முற்றிலும் முடங்கிப்போனது.

இந்த காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டன. ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களே நேரடியாக ஓடிடியில் வெளியிடும் சூழல் உருவானதால், திரையரங்குகள் கடும் பாதிப்பை சந்தித்தன. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்த கால கட்டத்தில் புதுப்படங்களை வெளியிட அனுமதி கிடைத்தாலும் அப்படங்களை தியேட்டரில் வந்து பார்க்க மக்கள் தயங்கினர். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போயினர்.

அந்த சமயத்தில் கூட்டமின்றி காத்துவாங்கிய தியேட்டர்களுக்கு புத்துயிர் கொடுத்த படம் என்றால் அது விஜய்யின் மாஸ்டர் தான். கொரோனாவுக்கு பின்னர் தியேட்டரில் வெளியான முதல் பெரிய படம் இதுதான். இப்படத்தை பார்க்க மக்கள் மீண்டும் தியேட்டருக்கு வரத் தொடங்கியதால் தான் திரையரங்குகள் பழைய நிலைக்கு திரும்பின. இப்படத்தை ஓடிடியில் வெளியிட பல முன்னணி ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் ரிலீஸ் செய்தால் தியேட்டரில் தான் வெளியிடுவேன் என ஓராண்டு காத்திருந்து இப்படத்தை வெளியிட்டார் விஜய்.

இதையும் படியுங்கள்... மதமாற்றம்; 3 முறை கருக்கலைப்பு... கமல்ஹாசன் உருகி உருகி காதலித்த ஸ்ரீவித்யா இத்தனை கொடுமைகளை அனுபவித்துள்ளாரா?

இன்றுடன் மாஸ்டர் படம் ரிலீஸாகி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில், அப்படத்தில் பலரும் கவனிக்க தவறிய சில சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்.

மாஸ்டர் திரைப்படத்தில் மகாநதி ஷங்கர் ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரது கதாபாத்திரத்திற்கு துலுக்கானம் என பெயர் சூட்டி இருப்பார் லோகி. ஷங்கர் மகாநதி படத்திலும் இதே பெயருடன் தான் ஜெயில் வார்டனாக நடித்திருப்பார். இதன்மூலம் லோகி தன்னுடைய குருவான கமலின் ரெபரன்ஸை வைத்திருப்பார்.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யின் நண்பர்களாக ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம்குமார் ஆகியோர் நடித்திருப்பார்கள். இவர்கள் படத்தில் மட்டுமல்ல ரியல் லைஃபிலும் விஜய்யின் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படம் பற்றிய மற்றுமொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால், நடிகர் விஜய் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பின்னர் 1992-ம் ஆண்டு முதல் 2019 வரை ஆண்டுக்கு ஒரு படமாவது அவர் நடிப்பில் தவறாமல் வெளியாகிவிடும். ஆனால் 2020-ம் ஆண்டு தான் அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத ஆண்டாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகியும் பாக்ஸ் ஆபிஸில் மரணஅடி வாங்கிய மெரி கிறிஸ்துமஸ்- முதல்நாள் வசூல் இவ்வளவுதானா?

click me!