Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?

Published : Jun 13, 2026, 03:30 PM IST

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு லலிதா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
கணவருடன் கருத்து வேறுபாடு

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமலைவாசன். இவரது மனைவி லலிதா (23). இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஹர்சன்ராஜ்(5), ஒன்றரை வயதில் புவன்ராஜ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு லலிதா தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் சிறுவாச்சூரில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார். மூத்த மகன் ஹர்சன்ராஜ் தந்தையுடன் இருந்து வந்தார்.

24
குழந்தையின் சாவில் மர்மம்

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி குழந்தை புவன்ராஜுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தாய் லலிதா அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதனிடையே தனது குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக குழந்தையின் தந்தை தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

34
தலைமறைவான லலிதா

இதனையடுத்து மர்ம மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு லலிதா திடீரென மாயமானதை அடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

44
கள்ளக்காதலனுடன் கைது

போலீஸ் விசாரணையில் பெற்ற குழந்தையை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். எனக்கும் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்ததால் பூச்சிக் கொல்லி மருந்தை கொடுத்து கொலை செய்ததாக கூறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் குழந்தை எப்படி இறந்தது என்று கேட்பார்கள் என்பதால் வலிப்பு வந்து உயிரிழந்ததாக தெரிவித்தேன் என்றார். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories