அப்போது, சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் கிஷாந்த் எழுந்து வந்து சக்திவேலை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அரிவாளை எடுத்து கிஷாந்தை வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற சத்யாவையும் வெட்டியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சக்திவேலை தேடி வந்தனர். இதனிடையே போலீஸ்க்கு பயந்து சக்திவேல் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.