இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?

Published : Apr 19, 2026, 12:47 PM IST

மைசூரு, சரகூர் தாலுகாவில் நடந்த ஜவரப்பா கொலை வழக்கை 24 மணி நேரத்தில் போலீசார் ఛேதித்துள்ளனர். கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி அமிர்தா மற்றும் அவரது காதலன் சித்தேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

PREV
15

கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம், சரகூர் தாலுகாவில் குர்ணேகாலா கிராமத்தைச் சேர்ந்த ஜவரப்பா என்பவர் கொலை செய்யப்பட்டவர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாவினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சித்தேஷ் (32) மற்றும் ஜவரப்பாவின் மனைவி அமிர்தா (26) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

25

குர்ணேகாலா கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் ஜவரப்பாவின் உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்தது. இதுகுறித்து ஜவரப்பாவின் சகோதரர் ரவி, தனது அண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாவினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சித்தேஷ் என்பவருடன் அமிர்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

35

இரண்டு குழந்தைகள் இருந்த போதிலும், அமிர்தா சித்தேஷுடன் உறவைத் தொடர்ந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு ஜவரப்பாவிற்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

45

12 நாட்களுக்கு முன்பு, பண்டிகைக்காக அமிர்தா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஏப்ரல் 16 ம் தேதி அன்று தன் மனைவியின் ஊருக்குச் செல்வதாக ஜவரப்பா தனது சகோதரர் ரவியிடம் கூறியுள்ளார். ஆனால், அன்று ஊருக்குச் சென்ற ஜவரப்பா மீண்டும் கிராமத்திற்குத் திரும்பவில்லை. மறுநாள் காலை சுமார் 6:30 மணியளவில், அவரது உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்டது.

55

யாரோ கொலை செய்திருக்கலாம் என ரவி சந்தேகப்பட்டு புகார் அளித்திருந்தார். புகாரைப் பெற்ற சரகூர் போலீசார், விசாரிக்க மூன்று தனிப்படைகளை அமைத்தனர். அப்போது, ஜவரப்பாவின் கொலைக்கு அவரது மனைவியின் கள்ளக்காதலே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். அமிர்தாவின் தூண்டுதலின் பேரிலேயே சித்தேஷ் இந்தக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories