Kerala Crime News: திருவனந்தபுரத்தில், ஒன்றரை வயது குழந்தை அதன் தாயின் கள்ளக்காதலனால் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அடுத்துள்ள பனவூரைச் சேர்ந்தவர் அகிலா (24). இவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த போது கணவர் அகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அர்ஷித் என்ற மகன் பிறந்துள்ளான். தற்போது குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் நிலையில், அஷ்கர் (31) என்ற என்ற நபருடன் அகிலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
25
குழந்தை கைகளிலும் எலும்பு முறிவு
இந்நிலையில் இவர்களின் கள்ளக்காதலுக்கு குழந்தை அர்ஷத் இடையூறாக இருந்துள்ளது. இதன் காரணமாக வளர்ப்பு தந்தை அஸ்கர், குழந்தையை அடிக்கடி அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். கொடூரத்தின் உச்சிக்கே சென்ற அஷ்கர் குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் தாயின் கண்முன்னே நடந்தும் கண்டிக்கவில்லை. இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த மறைந்த அகிலின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
35
உயிரிழந்த குழந்தை
கடந்த 29ம் தேதி அகிலா ஒரு நடன நிகழ்ச்சிக்காக வெளியூருக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை அர்ஷித்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஏடி மருத்துவமனைக்கு குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே குழந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
55
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
பிரேத பரிசோதனையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் குழந்தையின் விலா எலும்பில் 7 இடங்களில் முறிவு உட்பட உடலில் 91 காயங்கள் உள்ளதாகவும், மேலும் மூளை மற்றும் மார்பு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டதே காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையை காப்பாற்றாத தாய் அகிலாவையும் போலீசார் கைது செய்தனர்.