நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரிஜெக்ட் செய்த ஒரு பாடலை தான் வித்யாசாக இசையில் வெளியான தளபதி விஜய் படத்திற்கு கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார் யுகபாரதி என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
25
M Kumaran Son Of Mahalakshmi
இயக்குனர் மோகன் ராஜா, சுச்சுவேஷன் சொல்ல ஸ்ரீகாந்த் தேவா ஒரு காதல் பாடலை இசையமைத்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பாடலாசிரியர் யுகபாரதியும் உடன் இருக்க. யுகபாரதி 'கண்டேன் கண்டேன் உன் காதல் நான் கண்டேன்' என எழுத, மோகன் ராஜா வார்த்தைகள் கொஞ்சம் டிரெண்டியா வேணும் அப்படின்னு செல்கிறார். உடனே யுகபாரதி 'கண்டேன் கண்டேன்' என்கிற வார்த்தையை எல்லாவற்றையும் தூக்கி விட்டு ஐயோ ஐயோ உன் கண்கள் அய்யய்யோ அப்படின்னு சொல்லி... சில வார்த்தைகளை மாற்றி பட்டி டிக்கரிங் செய்து, இந்த பாடலை கொடுக்கிறார்.
இந்த பாடல் மோகன் ராஜாவுக்கு மட்டும் அல்ல, ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் மிகவும் பிடித்து போனது. மேலும் இந்த பாடலும் வெளியாகி இளம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்க பட்ட பாடலாக மாறியது.
45
Yuga Bharathi Song
இந்த பாடலை யுகபாரதி எழுதிய அதே நாள் ஈவினிங் வித்யாசாகர், யுகபாரதிக்கு கால் பண்ணி ஏதாவது பாட்டு பல்லவி வச்சிருக்கியா? அப்படின்னு கேட்க. இருக்கே அப்படின்னு சொல்லி அந்த தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வந்த 'மதுர' படத்திற்கு 'கண்டேன் கண்டேன்' பாடலை கொடுத்துள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே இந்த பாடல் வரிகள் இருந்ததால் வித்யா சாகர் ஷாக் ஆகிவிட்டார். இந்த பாடலும் தளபதிக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு பாடல்களை நீங்கள் இப்போது கேட்டாலும், ஒரு மாதிரியான தாக்கம் இருக்கும். அதற்க்கு காரணம். இரண்டு பாடல்களுமே ஒரு சில வார்த்தைகளை மட்டுமே மாற்றி பட்டி டிங்கரிங் செய்த பாடல். ஆனால் தனித்தனியாக கேட்டால் யாராலும் இதை கண்டுபிடிக்க முடியாது. இதுவே யுகபாரதி வரிகளின் மிகப்பெரிய வெற்றி எனலாம்.