இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் தமிழ் ஹீரோஸின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Dec 02, 2024, 02:27 PM IST

Tamil Actors First Salary : தமிழ் சினிமாவில் இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் உச்ச நட்சத்திரங்கள் முதன்முதலில் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பதை பார்க்கலாம்.

PREV
18
இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் தமிழ் ஹீரோஸின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamil Actors First Salary

சினிமா நடிகர்களின் சம்பளம் தான் ஜெட் வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 100 கோடி என்பதே நடிகர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் தமிழ் நடிகர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள். நடிகர்கள் விஜய், ரஜினி போன்றவர்கள் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். அதேபோல் அஜித், கமல் போன்ற நடிகர்கள் 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில், அவர்கள் முதன் முதலில் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

28
Rajinikanth

ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஒரு படத்துக்கு ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவர் முதன்முதலில் வாங்கிய சம்பளம் 750 ரூபாய் தானாம். அதேபோல் ஹீரோவாக நடிக்க ரஜினிகாந்த் முதன்முதலில் வாங்கிய சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.

38
Kamalhaasan

கமல்ஹாசன்

சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன் தற்போது ஒரு படத்துக்கு ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். இவர் முதன்முதலில் நடித்ததற்காக ரூ.500 சம்பளம் வாங்கினாராம். 

48
Vijay

விஜய்

இன்றைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். இவர் ஒரு படத்துக்கு ரூ.275 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால் முதன்முதலில் இவர் வெற்றி என்கிற படத்தில் நடித்தபோது அவருக்கு 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்... நெப்போலியன் பாணியில் குடும்பத்துக்காக 37 வயதில் ஓய்வை அறிவித்த முன்னணி நடிகர்!

58
Ajith

அஜித்

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.160 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் முதன்முதலில் ஒரு நிமிட விளம்பரத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் 2 ஆயிரத்து 500 ரூபாயாம்.

68
Suriya

சூர்யா

கங்குவா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்திருக்கும் சூர்யா, இன்று ஒரு படத்துக்கு ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவர் முதன்முதலில் கார்மெண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது அவருக்கு ரூ.750 சம்பளமாக வழங்கப்பட்டது.

78
Dhanush

தனுஷ்

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தற்போது ஒரு படத்துக்கு ரூ.80 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவர் தன் முதல் படத்திற்காக ரூ.5 ஆயிரம் சம்பளமாக வாங்கினாராம்.

88
Sivakarthikeyan

சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்துக்கு ரூ,50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். இவர் முதன்முதலில் மெரினா படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ.10 ஆயிரம் சம்பளமாக வாங்கினாராம்.

இதையும் படியுங்கள்... அன்று ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட சூரி; இன்று இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

Read more Photos on
click me!

Recommended Stories