ரூ.10,000க்கு விஸ்கி - 'உலகின் சிறந்த விஸ்கி' டைட்டில் வென்ற ஷாருக்கானின் DYAVOL ஸ்காட்ச் விஸ்கி!

First Published | Dec 2, 2024, 1:11 PM IST

Shah Rukh Khan's DYAVOL is the World's Best Whisky : உலகிலேயே சிறந்த மதுபானம் என்ற பெயரை ஷாருக்கானுக்கு சொந்தமான நிறுவனத்தின் விஸ்கி பெற்றுள்ளது.

D’YAVOL, Scotch whisky, Best Overall Scotch, NYWSC

Shah Rukh Khan's DYAVOL is the World's Best Whisky : பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். அதிக வருமான வரி கட்டும் நடிகர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.7300 கோடி ஆகும். நடிப்பு, முதலீடு மற்றும் விளம்பரங்கள், பிராண்டுகளின் ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

World's Best Scotch Whisky, Shah Rukh Khan, Aryan Khan

இந்த நிலையில் தான் உலகிலேயே சிறந்த மதுபானம் என்ற பெயரை ஷாருக்கானுக்கு சொந்தமாக நடத்தி வரும் நிறுவனத்தின் விஸ்கி பெற்றுள்ளது. DYAVOL தியாவோல் என்ற பெயரில் ஷாருக்கான் தன்னுடைய மகன் ஆரியன் கான் உடன் இணைந்து விஸ்கி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். DYAVOL தியாவோல் நிறுவனத்தின் விஸ்கி தான் உலகிலேயே சிறந்த மதுபானம் என்ற பெயரை பெற்றுள்ளது.

Latest Videos


2024 New York World Spirits Competition, The New York World Spirits Competition

அமெரிக்காவின் நியூயார்க்கில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மதுபானம் எது என்பதற்கான போட்டி நடத்தப்பட்டது. The Tasting Alliance என்ற அமைப்பு உலக சிறந்த மதுபானம் என்பதற்கான போட்டியை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி நியூயார்க்கில் நடைபெற்றது. இதில், இந்த துறையை சேர்ந்த சிறந்த வல்லுநர்கள் அடங்கிய குழு நடுவர்களாக நியமிக்கப்பட்டது.

Shah Rukh Khan, Aryan Khan, D’YAVOL, Scotch whisky, Best Overall Scotch

அதன்படி இந்தப் போட்டியில் பங்கேற்ற பல நிறுவனங்களின் பிராண்டுகளின் மதுபானங்களை ஆய்வு செய்த அந்த குழு சிறந்த மதுபானம் எது என்பதை தேர்வு செய்தது. அந்த குழுவின் ஆய்வின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மதுபானம் என்ற பெயரை ஷாருக்கானின் தியாவோல் என்ற நிறுவனத்தின் விஸ்கி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிராண்டு இந்த ஆண்டு சிறந்த மதுபானமாக தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Best Overall Scotch, NYWSC, 2024 New York World Spirits Competition

இந்த ஸ்காட்ச் விஸ்கி 8 அரிய வகையான சிங்கிள் மால்டுகளின் கலவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், இது ட்ரை ஃப்ரூட்ஸ், டார்க் சாக்லேட், வெண்ணிலா, ப்ளம்ஸ் ஆகியவற்றின் பிளேவர்களை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்காட்ச் விஸ்கியின் விலை மகாராஷ்டிராவில் ரூ.9800, கர்நாடகாவில் ரூ.9500க்கு விற்பனை செய்யப்படுகிறது. 750 எம்.எல். அளவு கொண்ட ஸ்காட்ச் விஸ்கியில் 47.1 சதவிகிதம் ஆல்கஹால் உள்ளது.

click me!