Lyricist Vaali Song Secret : கவிஞர் வாலி குடிபோதையில் எழுதிய பாடல் ஒன்று பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு ரசிகர்களால் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தது ஏவிஎம் நிறுவனம். அந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் என்றாலே அதற்கு தனி மவுசு இருக்கும். ஏவிஎம் நிறுவனத்தின் படங்களில் பணியாற்ற வாய்ப்பு வந்தால் அனைவரும் உடனே ஓகே சொல்லி விடுவார்களாம். அந்த அளவுக்கு அந்நிறுவனத்தை ஒரு தனி பிராண்டாக கட்டமைத்த பெருமை ஏவி மெய்யப்ப செட்டியாரையே சேரும். அவர்தான் ஏவிஎம் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
25
vaali song secret
இந்த ஏவிஎம் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கவிஞர் வாலிக்கும் ஆரம்ப காலகட்டத்தில் எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது. அவர் எம்.ஜி.ஆர் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு பாடல் எழுதி, கண்ணதாசனுக்கு டஃப் கொடுக்கும் பாடலாசிரியராக வலம் வந்த போதிலும், அவர் சினிமாவில் அறிமுகமான முதல் ஐந்து ஆண்டுகள் அவருக்கு ஏவிஎம் நிறுவனத்தின் படங்கள் ஒன்றில் கூட பாடல் எழுத வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
எதர்ச்சியாக ஒரு முறை வாலி பாடல் எழுதிய தெய்வத்தாய் பட பாடல்களை எல்லாம் கேட்டு வியப்படைந்த மெய்யப்ப செட்டியார் யார் இந்த பாடலாசிரியர் என கேட்க, அனைத்து பாடல்களையும் வாலி எழுதியது தெரியவந்து அவரை தன் படத்திலும் பாடல் எழுத வைக்க வேண்டும் என முடிவெடுத்து ஒரு நாள் மதிய வேளையில் எம்.எஸ்.விஸ்வனாதனிடம் நம்முடைய சர்வர் சுந்தரம் படத்துக்கு வாலியை பாட்டெழுத வர சொல் என சொல்லி இருக்கிறார்.
45
Server Sundaram Movie song secret
ஆனால் அன்று காலை வரை எம்.எஸ்.வி-யின் ஸ்டுடியோவில் பாடல் எழுதிய வாலி, மதியம் ஏவிஎம் படம் என்றதும், அப்போ நமக்கு பாடல் எழுத வேண்டிய வேலை இருக்காது என சொல்லிவிட்டு, வீட்டுக்கு சென்று மது அருந்தத் தொடங்கினாராம். வாலி குடித்துவிட்டு ஃபுல் போதையில் இருக்கும்போது மெய்யப்ப செட்டியார் பாடல் எழுத அழைத்த விஷயம் வாலியின் காதுக்கு சென்றிருக்கிறது. அதுவும் பாடல் உடனே வேண்டும் என்று மெய்யப்ப செட்டியார் வாலிக்காக காத்திருந்தாராம்.
55
Avalukkenna azhagiya mugam song
இதனால் செய்வதறியாது திகைத்துப் போன வாலி, வேறு வழியின்றி குடிபோதையிலேயே குளித்துவிட்டு, ஆடையை மாற்றிக் கொண்டு, ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு சென்றிருக்கிறார். அப்போது வாலியிடன் சிச்சுவேஷனை சொல்ல சொல்ல குடிபோதையிலேயே அவர் எழுதிய பாடல் தான் அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற பாட்டு. சர்வர் சுந்தரம் படத்தில் இடம்பெறும் இந்த பாட்டை வாலி குடிபோதையில் எழுதினார் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் அந்த அளவுக்கு அர்த்தமுள்ள வரிகளால் நிரம்பி இருக்கும் அந்த பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறது.