விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நீ நான் காதல்' சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை தனுஷிக் என்பவருக்கு தான் சில நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் முடித்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விஜய் டிவியில் துவங்கப்பட்ட சீரியல் 'நீ நான் காதல்'. ரொமான்டிக் டிராமா ஜர்னரில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்.. 'இஸ் பியார் கோ கியானா தூண்' என்கிற ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே இந்த ஹிந்தி சீரியல், தமிழில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து... தற்போது முழுக்க முழுக்க தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
26
Nee Naan Kadhal Serial Dhanusek
இந்த சீரியலை ராஜன் சுந்தரம் என்பவர் இயக்கி வரும் நிலையில், பிரேம் ஜாக்கோப் கதாநாயகனாகவும், வர்ஷினி சுரேஷ் கதாநாயகி ஆகவும் நடித்து வருகின்றனர். மேலும் வி ஜே தனுஷிக் விஜயகுமார், அஸ்விதா ஸ்ரீதாஸ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன், ஷீலா, தமிழ்ச்செல்வி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பான கதைகளத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், எப்போது அபி - ராகவ் ஒன்று சேர்வார்கள் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் ராகவ்வின் அக்காவாக, அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வி ஜே தனுஷிக் விஜயகுமார். இவருக்கும் தான் இப்போது காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
46
VJ Dhanusek
இந்த சீரியலில் ஹீரோ - ஹீரோயினுக்கு அடுத்தபடியாக அஞ்சலி கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக உள்ளது. இவருடைய கணவர்தான் தற்போது ஹீரோயின் அபியை எப்படியும் அடைந்தே தீர வேனுடம் என சபதம் போட்டு, ராகவ் மற்றும் அபியை பிரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். இந்த சீரியலில் கர்ப்பிணியாக இருக்கும் தனுஷிக், ஒரு விஜே-வாக இருந்து தன்னுடைய கேரியரை துவங்கியவர்.
தமிழில் சில தொலைக்காட்சிகளில், ஆங்கரிங் செய்ய துவங்குவதற்கு முன்பே, ஸ்ரீலங்கன் தொலைக்காட்சிகள் தான் பணியாற்றினார். பார்ப்பதற்கு மார்டன் பெண்ணாக தெரிந்தாலும், இலங்கை தமிழில் மிகவும் அழகாக பேசக் கூடியவர். இளம் வயதிலேயே ஆங்கரிங் துறையை தேர்வு செய்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்த துவங்கினார். மேலும் இலங்கை ஒரு சிறிய நாடு என்பதால், அவரால் குறிப்பிட்ட தன்னுடைய திறமையை வளர்த்து கொண்ட இந்தியா வர முடிவு செய்தார்.
66
VJ Dhanusek Engagement
இவருக்கு தமிழகத்தில் இருந்த சில நண்பர்கள் உதவுவதாக கூறிய வார்த்தையை நம்பி இந்து வந்தார். ஆனால் இவர் நம்பிய நண்பர்கள் அனைவரும் இவரை நடுத்தெருவில் தான் நிறுத்தினர். இவர் இலங்கையில் பணியாற்றிய தொலைக்காட்சியின் பாஸ் தான் தன்னுடைய நண்பர்கள் மூலம் உதவி செய்துள்ளார். உணவு மற்றும் பணம் என பல்வேறு வகையில் சுமார் 9 மாதங்கள் அந்த நபரின் தோழி தான் இவரை கவனித்து கொண்டாராம். பின்னர் தமிழ் தொலைக்காட்சிகளில் விஜே மற்றும் சீரியல் வாய்ப்பு தேட துவங்கினார்.
தன்னுடைய கடுமையான காலங்களை கடந்து தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'நீ நான் காதல்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு தான் திருமணம் நடைபெற உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இவருடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.