நடிகை சமந்தா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'யசோதா' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இப்படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் ஆகிய இரண்டு இயக்குனர்கள் இயக்கியுள்ளார். அழுத்தமான கதை, யூகிக்க முடியாத திருப்பங்களுடன் எடுத்துள்ளது, இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றும், இசை, ஒளிப்பதிவு, விஷுவல் எஃபக்ட் போன்றவை அற்புதமாக உள்ளதாக ரசிகர்கள் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
'யசோதா' படத்திற்கு முதல் நாள் கிடைத்த வரவேற்பை பார்த்து திகைத்துப் போன சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில், யசோதா படத்தில் இருந்து ஒரு போஸ்டரைப் பகிர்ந்து, "முன்பை விட இந்த முறை, படத்தை விளம்பரப்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன். ரிலீஸுக்கு முன் நீங்கள் என் மீதும், யசோதா மீதும் பொழிந்த பாசம் நம்பிக்கை அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நீங்கள் தான் என் குடும்பம். நீங்கள் படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டிருந்தார்.