தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா, மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில், இவர் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்டை காதலிப்பதாக கூறி செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த சமயத்தில் ரிச்சர்ட் உடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை அடுத்தடுத்து நடிகை யாஷிகா பதிவிட்டு வந்ததால், இந்த காதல் சர்ச்சை வைரலாக பரவியது. பின்னர் அது தாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் யாஷிகா.