நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, தமிழ் திரையுலகில் ஹீரோயினாக நடித்துள்ளார். விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள வனிதா, திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகினார். வனிதாவுக்கு கடந்த 2000-ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. அவர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஸ்ரீஹரி என்கிற ஒரு மகனும் உள்ளார். 2007-ம் ஆண்டு ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் வனிதா.