பெயர தூக்க நாலு பேரு... பட்டத்த பறிக்க நூறு பேரு! சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு ஜெயிலர் ரஜினி கொடுத்த தரமான பதிலடி

First Published | Jul 18, 2023, 9:23 AM IST

ஜெயிலர் படத்தின் ஹுகூம் பாடலின் வரிகள் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

jailer

நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் ஜெயிலர் படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜெயிலர் படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றது.

jailer

முதலில் அப்படத்தில் இடம்பெற்ற காவாலா என்கிற பாடலை படக்குழு வெளியிட்டது. தமன்னாவை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட இப்பாடல் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது. இதற்கு காரணம் இப்பாடலில் இடம்பெற்ற தமன்னாவின் ஹூக் ஸ்டெப் நடனம் தான். அந்த நடனத்தை ஆடி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஏராளமானோர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கத்தி.. துப்பாக்கி.. புல்லட்டு எல்லாம் பறக்குது! மாஸாக வெளியாகி மெர்சல் செய்த 'ஹுக்கும்' லிரிகள் பாடல்!

Tap to resize

jailer

காவாலா பாடல் பட்டைய கிளப்பி வரும் நிலையில், அடுத்தபடியாக ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிளாக ஹுகூம் என்கிற பாடலை படக்குழு வெளியிட்டது. நேற்று வெளியிடப்பட்ட இப்பாடல் ரஜினியின் கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் இருந்தாலும், அதனை அவரது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். குறிப்பாக அப்பாடல் மூலம் தனது சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க நினைப்பவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.

jailer

அதன்படி ஹுகூம் பாடலில், இடம்பெற்ற “பெயர தூக்க நாலு பேரு... பட்டத்த பறிக்க நூறு பேரு” என்கிற ஒரே வரி தான் தற்போது செம்ம டிரெண்டாகி வருகிறது. விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என வாரிசு பட ரிலீஸ் சமயத்தில் பலர் தெரிவித்தது பேசு பொருள் ஆனது. இதற்கு எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் சைலண்டாக இருந்து வந்த ரஜினி, தற்போது இந்த பாடல் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த பாடல் வரிகளை ரஜினியின் தீவிர ரசிகனும், சுட்டகதை படத்தின் இயக்குனருமான சூப்பர் சுப்பு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சீக்ரெட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இம்முறை விவாகரத்துக்கு வாய்ப்பே இல்ல - அதிர்ச்சி கொடுத்த வனிதா

Latest Videos

click me!