'யாரடி மோகினி' சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு நடந்த திடீர் திருமணம்! இது தான் காரணமாம்... வைரலாகும் புகைப்படம்

First Published | Jul 11, 2022, 8:33 PM IST

'யாரடி மோகினி', 'வள்ளி திருமணம்' ஆகிய சீரியலில் நடித்துள்ள நக்ஷத்திராவின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'கிடாரி பூசாரி மகுடி' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நக்ஷத்திரா. இதை தொடர்ந்து பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் நடிகையாக மாறினார்.

அந்த வகையில் இவர்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்த 'யாரடி நீ மோகினி' தொடர் மிகவும் பிரபலம். மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

மேலும் செய்திகள்: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்... மஞ்சள் நிற பட்டுப்புடவை கட்டி... மல்கோவா மாம்பழம் போல் போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்!!
 

Tap to resize

இந்த சீரியலை தொடர்ந்து 'அபி டைலர்' சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வள்ளி திருமணம்' தொடரில் எதிர்மறையான கதாபாத்திரத்தை தேர்வு செய்து, தன்னால் இப்படி பட்ட கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் விஸ்வா என்பவருக்கும் திடீர் என திருமணம் நடந்துள்ளது. தன்னுடைய கணவருடன் மாலையும், கழுத்துமாக நட்சத்திரா இருக்கும் புகைப்படங்கள் வெளியாக அவை வைரலாகி வருகிறது. மேலும் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: சித்ரா மாதிரியே அவளுக்கும் நடந்திருமோனு பயமா இருக்கு... பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி
 

இந்த திடீர் திருமணம் குறித்து வெளியாகியுள்ள தகவலில்... நட்சத்திராவை தூக்கி வளர்த்த அவரது தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தன்னுடைய கடைசி காலத்தில் பேத்தியின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்கிற அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக  அவர்களது குலதெய்வ கோயிலில் வைத்து வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் நட்சத்திரா – விஷ்வா திருமணம் நடந்து முடிந்தாக கூறப்படுகிறது.

அண்மையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி, நக்ஷத்திரா குறித்து பேசிய போது ' சினிமா துறைக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நட்சத்திராநிறைய தப்பான விஷயங்கள் செய்துள்ளார். ஆனால் அவள் தப்பான பொண்ணு கிடையாது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவர் காதலிக்கும் பையன் வீட்டில் அவரை பிடித்து வைத்திருப்பதாகவும், நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாற்ற முடியவில்லை.என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திரா 2.5 லட்சம் சம்பளம் வாங்குகிறார், ஆனால் அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை என்பது தான் உண்மை.  இதை கேட்டால் தண்னி தாக்குவதாக கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்: ஸ்ரீநிதி குற்றச்சாட்டு உண்மையா..? காதலரால் எனக்கு கொடுமை நடந்ததா..? நடிகை நக்ஷத்ரா வெளியிட்ட பரபரப்பு வீடியோ..
 

இவரது இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நட்ச்சத்திரா வெளியிட்ட வீடியோவில், ஸ்ரீநிதி பேசுவது அனைத்தும் பொய் என்பது போல கூறியிருந்தார். நான் காதலிக்கும் பையன் வீட்டில் என்னை பிடித்து வைத்திருப்பதாக கூறுவதில் துளியும் உண்மை இல்லை என்றும், ஸ்ரீநிதி மனஅழுத்ததில் உள்ளார். அவர் சொல்வதெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம். தன் மீது கொண்ட அக்கறையின் காரணமாகவே அப்படி பேசியதாக கூறினார்.

அதே போல் விரைவில் தன்னுடைய திருமணம் குறித்த தகவலையும் வெளியிட உள்ளதாக நக்ஷத்திரா தெரிவித்திருந்த நிலையில், தற்போது திருமண புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவரது திருமண புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை நக்ஷத்திரா - விஷ்வா ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
 

Latest Videos

click me!