kamal haasan gifts a watch to suriya
முன்பு கமலின் வாரிசாக சூர்யா நடிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சூர்யா முதல் முறையாக டெரர் கெட்டப்பில் இந்த படத்தில் தோன்றியிருந்தார். ரத்தம் சொட்ட சொட்ட கண்களில் வெறித்தனத்தோடு, போதை உட்கொண்ட வில்லனாக தெறிக்க விட்டிருந்தார் சூர்யா. கிளைமாக்ஸில் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே வந்த ரோலக்ஸ்-ன் ரோல்தான் விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்தது என்றே கூறலாம்.
உண்மையில் விக்ரம் படத்தில் நடித்த சூர்யா சம்பளம் எதுவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பலத்த வரவேற்பை பார்த்த கமல் தம்பிக்கு சிறிய வேடம் கொடுத்தது குறித்து வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதோடு மிக நீண்ட படைப்பை இருவரும் சேர்ந்து முயற்சிக்கலாம் என ட்வீட் செய்திருந்தார். அதோடு அன்பு பரிசாக காஸ்ட்லீ கைக்கடிகாரத்தையும் கொடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு...தி க்ரே மேன் படம் குறித்து ஓப்பனாக பேசிய தனுஷ்.. வாய்ப்பை கேட்டதும் துள்ளி குதித்ததாக பேட்டி
படம் வெளியாகி ஒரு மாதங்கள் கழித்தும் ரோலக்ஸ் குறித்தான தாக்கம் இன்னும் குறையவில்லை இந்நிலைகள் சூர்யாவின் மற்றும் ஒரு படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 41வது படமான இதன் டைட்டில் போஸ்டர் தான் இது.