தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பாலாவிற்கு கைகொடுக்கும் விதமாக சூர்யா தான் ஒரு படம் நடித்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதனுடன் தனது பேனரான 2டி மூலமே இந்த படத்தை தயாரிக்கவும் சம்மதித்தார். சூர்யா 41 என தற்காலிகமாக பேயரிடப்பட்ட இந்த படம் கன்னியாகுமரி ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
கடற்கரை ஒட்டி உள்ள பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவனின் கதையாக இந்த படம் உருவாகிறது. இதற்கிடையே படப்பிடிப்பில் அதிரடி காட்டி வரும் பாலா சூர்யாவை தாறுமாறாக திட்டியதாகவும் அதனால் கோபித்துக் கொண்ட நாயகன் படப்பிடிப்பிலிருந்து வெளியானதாகவும் தகவல் தீயாக பரவியது.