யானை-யை தொடர்ந்து ஏ.எல் விஜயுடன் கைகோர்க்கும் அருண் விஜய்!

Published : Jul 18, 2022, 03:28 PM IST

புதிய தகவலின்படி நடிகர் அருண் விஜய் யானை படத்தை தொடர்ந்து ஏ.எல் விஜயின் புதிய திட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது..

PREV
15
யானை-யை தொடர்ந்து ஏ.எல் விஜயுடன் கைகோர்க்கும் அருண் விஜய்!
yaanai

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். வாரிசு நடிகராக இவர் முன்னணி நாயகனாக தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார்.தற்போது இவர் நடிப்பில் யானை படம் வெளியாகியுள்ளது. அருண் விஜயின் சகோதரியின் கணவரான ஹரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.. இதில் பிரியா பவானி சங்கர் கதாநாயகன் நடித்திருந்தார்.

25
yaanai

கிராமத்து நாயகனின் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் செண்டிமெண்ட் கலந்த திரில்லராக இந்த படம் உருவாகி வரவேற்பு பெற்றது. ஹரியின் நான்காண்டு காத்திருப்பு பிறகு வெளியான இந்த படம் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஜூலை ஒன்றாம் தேதி வெளியானது.

மேலும் செய்திகளுக்கு...இந்நாளில் மறைந்த கவிஞர் வாலி... எழுத்துக்களால் சிகரம் படைத்தவரின் வெற்றி வரிகள் !

35
yaanai

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஏறக்குறைய 15 நாட்கள் திரையரங்கில் ஓடிய படம் நடிகரின் வெற்றி படங்களில் ஒன்றானது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, பழனி உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

மேலும் செய்திகளுக்கு...கொரோனா மற்றும் செல்ல பிராணியுடன் போராடும் வரலட்சுமி சரத்குமார்...வீடியோ இதோ!

இறுதியாக காரைக்குடியில் முடிவடைந்த இந்த படத்தில் ராமச்சந்திர ராஜு, சமுத்திரகனி, ராஜேஷ், ஐஸ்வர்யா, அம்மு அபிராமி, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோ நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு மேற்கொள்ள ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெளியீட்டு உரிமையை கே கே ஆர் சினிமாஸ் பெற்றிருந்தது. இந்த படம் 32.75 கோடிகளை வசூலாக பெற்றதாக கூறப்படுகிறது.

45
Arun Vijay

புதிய தகவலின்படி நடிகர் அருண் விஜய் யானை படத்தை தொடர்ந்து ஏ.எல் விஜயின் புதிய திட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது.. இந்த படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிருபவனம் விரைவில் வெளியிட உள்ளார்கள் என்றும் தகவல் பரவி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்... வலிமை சுமாரான படம் தான் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீநிதி

55
A.L.vijay

இந்த குழுவில் இடம் பெறும் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்ஸ் குறித்த தகவல் ஏதும் இல்லை. இயக்குனர் ஏ.எல். விஜய் 'அஜித் நடித்த கிரீடம் 'படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சூர்யா மற்றும் அஜித், விக்ரம்,பிரபு தேவா உள்ளிட்டவர்களுடன்  சில வெற்றிப் படங்களை செய்துள்ளார். சமீபத்தில் இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவியை இயக்கி இருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories