இன்று 40-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published : Jul 18, 2022, 02:59 PM IST

இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை, செல்ல மகள், மற்றும் காதல் கணவருடன் கொண்டாடி வரும் நடிகை பிரியங்கா சோப்ராவின் (Priyanka Chopra net worth) சொத்து மதிப்பு குறித்த தகவல் இதோ...  

PREV
111
இன்று 40-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இன்று ஜூலை 18ஆம் தேதி தன்னுடைய 40 ஆவது வயதை எட்டியுள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை, காதல் கணவருடன் மட்டும் அல்லாமல் தன்னுடைய செல்ல மக்களுடனும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார். 
 

211

அண்மையில் கூட, பிரியங்கா சோப்ரா... தன்னுடைய கணவர் நிக் ஜோனாஸுடன் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு சென்று விடுமுறையை கழித்தார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
 

311

மேலும் பிரியங்காவின் பிறந்தநாளில், அவரது சொத்து மதிப்பு பற்றி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ராவின் நிகர மதிப்பு $35 மில்லியன் அதாவது சுமார் (ரூ. 270 கோடி) என கூறப்படுகிறது.

மேலும் செய்த்திகள்: பணவீக்கத்தால் ஏற்பட்ட உச்சகட்ட அவலம்! மாட்டு சாணத்தை நாப்கினாக பயன்படுத்தும் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!
 

411

2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு பிரியங்கா சோப்ரா சர்வதேச அளவில் புகழ் பெற்றார். தற்போது பாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
 

511

2016 ஆம் ஆண்டில், பிரியங்கா சோப்ராவை டைம் இதழ் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பட்டியலிட்டது, மேலும் இந்திய அரசாங்கம் அவருக்கு நான்காவது மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.
 

611

பிரியங்கா ஒரு ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் திரைப்படங்கள் மூலம் சம்பளமாக பெறுகிறார். இதை தவிர பிரியங்காவின் பிராண்ட் ஒப்புதல்கள்,  ஒரு ஒப்புதலுக்கு 5 கோடி ரூபாய் வரை பணம் பெறுகிறார். மேலும் ஹாலிவுட்டில், நடித்து வரும் தொலைக்காட்சி தொடருக்கு, ஒரு எபிசோடுக்கு ரூ.2 கோடி சம்பளம் பெறுகிறார்.

மேலும் செய்த்திகள்: போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்
 

711

தனது அபரிமிதமான சம்பாத்தியத்தால் அரசுக்கு அதிக வருமான வரி செலுத்தும் முன்னணி பிரபலங்களில் பிரியங்காவும் ஒருவர். பிரியங்கா தனது வருமானத்தைத் தவிர, தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவைகளுக்கு கொடை வழங்குவதிலும் முன்னணியில் உள்ளார்.
 

811
নিক-

தனக்கு வைரம், தங்கம் மீது ஆர்வம் இல்லை என்று பிரியங்கா கூறுவதால். தங்கம், வைரம் போன்ற பொருட்களில் முதலீடு செய்வதை தவிர்த்து, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார். 
 

911

மும்பை மற்றும் கோவாவில் தான் அதிக முதலீடு செய்கிறார். அதே போல் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பங்கு பணத்தை தொண்டுக்கு நன்கொடை அளிக்கிறார். 

மேலும் செய்த்திகள்: மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகள் கேயா யார் தெரியுமா? அடேங்கப்பா இந்த துறையில் இவர் வல்லவராம்!
 

1011

நடிகையின் முதலீடு சுமார் ரூ. 55 கோடி. இந்திய வருமான வரி அறிக்கையின்படி பிரியங்காவுக்கு மொத்தம் ஒன்பது சொத்துக்கள் உள்ளன. இவற்றில் ஐந்து மும்பையின் புகழ்பெற்ற ராஜ் கிளாசிக் கட்டமைப்பிற்குள் அமைந்துள்ளன. பிக் ஆப்பிளில் (NYC) -ல் ஒரு குடியிருப்பும் உள்ளது. அதே போல் பிரியங்காவும், நிக்கும், 2018 இல் $6.5 மில்லியனுக்கு வாங்கிய பெவர்லி ஹில்ஸ் வீட்டில் திருமணம் ஆன முதல் ஆண்டைக் கழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

1111

பாலிவுட்டில் 2.5 கோடி ரூபாய்க்கு ராய்ஸ்-ராய்ஸ் காரை வாங்கிய முதல் நடிகை பிரியங்கா சோப்ரா ஆவார். இதை தவிர 1.1 மில்லியன் பெறுமதியான Mercedes Benz S ரக கார் ஒன்றையும் வைத்துள்ளார். மேலும்  BMW, Porsche மற்றும் Mercedes-Benz E-கிளாஸ் போன்ற சொகுசு கார்கள் சிலவற்றையும் வைத்துள்ளார்.

click me!

Recommended Stories