"இனி சென்னை அணியின் முதலாளி".. விளையாட்டில் திடீரென ஆர்வம் காட்டும் சமந்தா!

Ansgar R |  
Published : Aug 22, 2024, 09:29 PM IST

Samantha : நடிகை சமந்தா ரூத் பிரபு, உலக பிக்கில்பால் லீக்கின் (WPBL) சென்னை அணியின் உரிமையாளராக இப்பொது நியமிக்கப்பட்டுள்ளார்.

PREV
14
"இனி சென்னை அணியின் முதலாளி".. விளையாட்டில் திடீரென ஆர்வம் காட்டும் சமந்தா!
PickleBall League

NSG - அதாவது நடேகர் விளையாட்டு மற்றும் கேமிங் (Natekar Sports and Gaming) என்ற நிறுவனம் நடத்தும் ஒரு லீக் போட்டிகள் தான் இந்த WPBL எனப்படும் World PickleBall League. இந்தியாவில் மெல்ல மெல்ல இந்த விளையாட்டு பிரபலமடைந்து வரும் நிலையில், இனி இந்தியாவில் நடக்கவிருக்கும் லீக் போட்டிகளில், சென்னை அணியின் தலைவராக நடிகை சமந்தா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கரையில்லாத கையை பிடிச்சு போக போறோமே; த.வெ.க கட்சி பாடலால் ஆளும் கட்சியை தாக்கிய தளபதி?

24
Samantha Ruth Prabhu

"முதல் பார்வையில் காதல்" - இந்த பிக்கில்பால் விளையாட்டு பற்றிய எனது உணர்வுகளை நான் இப்படித்தான் விவரிப்பேன். இந்த விளையாட்டை நான் பார்த்ததுமே அது என்னை ஈர்த்துவிட்டது. வரவிருக்கும் உலக பிக்கில்பால் லீக்கில், நமது சென்னை அணிக்கு உரிமையாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் வளர்ந்து வரும் விளையாட்டு சுற்றுச்சூழலின் ஒரு பகுதியாக இருக்க நான் எப்போதும் விரும்புகிறேன்," என்று சமந்தா கூறியுள்ளார்.

34
PickleBall

"சமீபத்திய ஆண்டுகளில், விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பில் கணிசமான அதிகரிப்புடன், பலவகை விளையாட்டுகளை கொண்ட நாடாக மாறுவதில், நமது நாடு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் இளம் பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதே எனது குறிக்கோள், இந்த முன்னெடுப்பில் பங்கேற்க நான் ஆர்வமாக உள்ளேன். கௌரவ் நடேகர் மற்றும் ஏஐபிஏவுடன் இணைந்து இந்த விளையாட்டில் பங்கேற்பதற்கு நான் மிகுந்த ஆவலாக உள்ளேன் என்றும் அவர் மேலும் கூறினார்.

44
Actress Samantha

"உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டாக இந்த பிக்கில்பால் உள்ளது, மேலும் இந்த லீக்கில், உலகின் தலைசிறந்த வீரர்கள் இந்திய மண்ணில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நடிகை சமந்தாவை பொறுத்தவரை, விளையாட்டுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதிலும், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதிலும் ஆர்வமாக உள்ளார். AIPAல் உள்ள நாங்கள் பிக்கில்பால் விளையாட்டை நாடு முழுவதும் மேலும் பிரபலப்படுத்த அவருடன் ஒத்துழைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அகில இந்திய பிக்கில்பால் சங்கத்தின் தலைவர் அரவிந்த் பிரபு கூறினார்.

எம்.எஸ்.தோனி மீது கிரிமினல் வழக்கா? உச்சநீதிமன்றம் கொடுத்த தரமான தீர்ப்பு - என்ன தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories