22 வருடம் ஆகிடுச்சா? வைரலாகும் அஜித் - ஷாலினி திருமண அழைப்பிதழ்!

First Published | Aug 22, 2024, 9:01 PM IST

கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Shalini And Ajith:

கோலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மாறிய ஷாலினியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.
 

Ajith Kumar 25th Movie is Amarkalam

அஜித் தன்னுடைய 25 ஆவது படமான, 'அமர்க்களம்' படத்தில் நடிக்கும் போது... ஷாலினியை முதல் முதலாக சந்தித்தார். இந்த படத்தில் பணியாற்றும்போதே, அஜித்துக்கு ஷாலினி மீது காதல் வர அதை நேரடியாக அவரிடம் கூறினார். ஷாலினி முதலில் அஜித்தின் காதலை ஏற்றுக் கொள்ள தயங்கினாலும், பின்னர் அஜித்தின் குணம் மற்றும் அவர் அனைவருக்கும் கொடுக்கும் மரியாதை ஷாலினிக்கு அஜித் மீது காதல் வர காரணமாக அமைந்தது.

விஜய் டிவி சீரியல் நடிகை நேகா கவுடாவுக்கு நடந்த வளைகாப்பு! குவிந்த பிரபலங்கள்!

Tap to resize

Ajith Care Shalini

அமர்க்களம் படத்தில், அஜித்துடன் ஷாலினி நடித்த போது... அஜித் வைத்திருந்த பிளேடு ஷாலினி கையை பதம் பார்த்ததால்...  அஜித் தன்னைவிட ஷாலினியை அதிகம் பாதுகாக்க நினைத்தார். இதுவே ஷாலினி மீது அஜித்துக்கு காதல் வர ஒரு காரணமாக அமைந்தது.
 

Ajith weds Shalini

சில வருடங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்,  2000-ஆம் ஆண்டு இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. இவர்களின் திருமணம் சென்னையில் உள்ள தாஜ் கோரமெண்டல் ஹோட்டலில் நடந்தது. இதில் விஜய், விஜயகாந்த், ரஜினி, பிரபு, உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட ரஜினிகாந்த்; நடிகை சுமித்ரா கூறிய அதிர்ச்சி சம்பவம்!

Ajith And Shalini Kids

திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஷாலினி - அஜித் தம்பதிகளுக்கு அனோஷ்கா என்ற மகள் பிறந்தார். 2015 ஆம் ஆண்டு ஆத்விக் என்கிற மகனும் பிறந்தார். தற்போது வரை திரையுலகமே மெச்சும் அளவுக்கு அந்யோனியமான ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள்.

Ajith and Shalini Wedding Invitation:

அஜித் - ஷாலினி திருமணம் நடந்து 22 வருடங்கள் ஆகும் நிலையில், இவர்களுடைய திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

த.வெ.க கட்சி பாடலை கேட்டு கண் கலங்கி அழுத புஸ்ஸி ஆனந்த்! தேற்றிய தளபதி - போட்டோஸ்!
 

Latest Videos

click me!