சமீபத்தில் தன்னுடைய 80-வது பிறந்தநாளை யாரும் இல்லாமல், மனைவியுடன் மட்டுமே எஸ்.ஏ.சி கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இவரது மணிவிழாவிலும் விஜய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என யாரும் கலந்துகொள்ளவில்லை.
நெட்டிசன்கள் பலர், பிள்ளைகள் கூட இருந்து செய்ய வேண்டிய நற்காரியங்களை, ஒரே மகனாக இருந்தும் விஜய் செய்ய தவறி விட்டதாக தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். படத்தில் மட்டும் பாச மழை பொழியும் விஜய் ஏன், இந்த விசேஷத்தில் கலந்துகொள்ள வில்லை என்கிற கேள்விகளும் எழுந்தது.
தன்னுடைய மகன் விஜய்க்கு ஐதராபாத்தில் ஜூலை 2-ம் தேதி ஷூட்டிங் இருந்த காரணத்தால் 1-ம் தேதியே கிளம்பி சென்று விட்டார் இதன் காரணமாகவே அவர் கலந்து கொள்ள வில்லை என தெரிவித்தார்.
அதே போல்... மற்றொரு தரப்பினரோ, விஜய் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டு இவர்களது மணிவிழாவை சிறப்பித்திருக்கலாம். ஏன் அவர்களும் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். இப்படி பல கேள்விகள் எழுவதால்... எஸ்.ஏ.சி சொல்வதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? நீங்களே யோசித்து உங்கள் கருத்தை கூறுங்கள்.