Ram charan Upasana Kamineni
ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் மாவீரன் படத்தின் மூலம் மிகவும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். கட்டுமஸ்தான உடலாலும் அவரது வீரம் ததும்பும் நடிப்பாலும் டாப் நாயகர்களில் ஒருவராகி விட்டார். வாரிசு நடிகரான ராம்சரனின் சமீபத்திய படமான ஆர் ஆர் பேன் இந்தியா அளவில் அவரை புகழ் பெற்றவர் ஆக்கியது. சீதாராமன் ராஜு என்னும் போலீஸ்காரராக இவர் மிரட்டி இருந்தார்.
Ram charan Upasana Kamineni
வரலாற்று நாயகனாக சித்தரிக்கப்பட்ட ராம்சரணின் மனைவி சமீபத்தில் பேசி இருந்தது தற்போது வைரலாகி வருகிறது. 10 வருட காதல் பந்தத்தில் இணைந்திருப்பவர்கள் ராம்சரண் - உபாசனா. இவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்த எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் இந்த தம்பதிகள் மீது மக்களின் வேறொரு கண்ணோட்டம் திரும்பியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..
Ram charan Upasana Kamineni
சமீபத்தில் ஆன்மீக குருவான சத்குருவை சந்தித்த உபாசனா தங்களது உரையாடலின் போது, மக்கள் தொகையை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது குறித்தான எண்ணத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் இதனால் தங்களுடைய ஆர்ஆர்ஆர் (relationship, reproduction and role in life) குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..சுழற்றி அடிக்கும் பிரச்சனை... லீனா மணிமேகலைக்கு LOC!! போபால் போலீசார் அதிரடி!!
Ram charan Upasana Kamineni
முன்னதாக குழந்தைகள் பற்றி பேசியிருந்த ராம்சரண், ரசிகர்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் ஒரு குடும்பத்தை தொடங்கினால் எனது பணியில் இருந்து விலகலாம். உபசனாவுக்கும் சில இலக்குகள் உள்ளன. அதனால் சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.