Kamalhaasan
உலகநாயகன் கமல்ஹாசன் பல்வேறு திறமைகள் கொண்ட ஆகச்சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெறும் நடிகர் என்று மட்டும் அவரை சுருக்கிவிட முடியாது. இயக்குனர், நடனக் கலைஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர்.
Kamalhaasan
தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தனது நடிப்பு திறமைக்காக தேசிய விருது, பிலிம்ஃபேர் விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
குறிப்பாக 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். 1999 வரை தொடர்ச்சியாக பிலிம்ஃபேர் விருதை வென்ற அவருக்கு 2000-ம் ஆண்டுக்கு பிறகு பிலிம்ஃபேர் விருதுகள் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நடிகர் கமல்ஹாசன் தனக்கு விருது வேண்டாம் என்று மறுத்துள்ளார்.. ஆம். தன்னை எந்தப் பிரிவிலும் பரிந்துரைக்க வேண்டாம் என்றும் இனிமேல் இந்த விருதை வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு வழங்குமாறும் விருது அமைப்பாளர்களுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகே கமல்ஹாசனின் பெயர் பிலிம்ஃபேர் விருதுகளில் பரிந்துரைக்கப்படவில்லை. அப்படி ஒருவேளை கடிதம் எழுதவில்லை எனில் அவர் மேலும் பல பிலிம்ஃபேர் விருதுகளை குவித்திருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் விருதுகளும், கௌரவமும் தனக்கு மட்டுமே கிடைக்காமல் மற்ற திறமையான நடிகர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் எண்ணத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
indian 2
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் KH233 படம், கல்கி 2898 AD போன்ற மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் கமல் நடித்து வருகிறார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் கமல் மீண்டும் கை கோர்த்துள்ளார். தக் லைஃப் என்று பெயரிடப்படுள்ள இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் இடம்பெற்ற காட்சி, வசனங்கள் ஆகியவை இப்படம் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்து உள்ளது.